பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட் டுத் தளத்தில் I பாரதி | சீனிவாசன் பண்பாட்டில் பாரதிக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும் பாரதி நூல்களையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் ஆழ்ந்து படிக்கும்போது அவருக்கு மகாபாரதக் கதையிலும், அதன் தெய்வீகப் பாத்திரங்களிலும், எல்லாவற்றிற்கும் மேலாகக் கண்ணனிடம் மிகுந்த பற்றும் பாசமும் ஈடுபாடும் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதில் ஆழ்வார்களுக்கு ஈடாக, அதற்கும் மேலாக பாரதியைக் காண்கிறோம். கண்ணபிரானின் எண்ணற்ற அனந்தமான வடிவங்கள் பாரதியை மயக்கியிருக்கிறது. பாரதி, தான் கண்ட உணர்ந்த அனுபவித்த சிந்தித்த அனைத்திலும் தான் வாழ்ந்த உழைத்த, நடந்த கவிதைகளை எழுதிய பாடிய அனைத்து நிலைகளிலும் கண்ணனைக் கண்டிருக்கிறார். பாரதி தான் கண்ட அனைத்து உயிர்ப் பொருள்களையும் உயிரினங்களையும் ஜடப் பொருள்களையும் காடுமலைகளையும் கடலையும் ஆறுகளையும் மனிதர்களையும் மக்களையும் பஞ்ச பூதங்களையும் அவைகளின் பகுதிகளையும் அவைகளின் அசைவுகளையும் செயல் பாடுகளையும் நில்ை பாடுகளையும் மாற்றங்களையும் வளர்ச்சி நிலைகளையும் கண்ணனாகவே கண்டு மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார். பாரதியின் கண்ணன் உலகப் பெருவடிவத்தின் உலகப் பெருவடிவம், விஸ்வரூபத்தின் விஸ்வரூபம், துரியோதனனுடைய வேண்டுதலின் பேரிலும் தூண்டுதலின் பேரிலும், சகுனி, தனது சூழ்ச்சி முறையால், திரதராட்டிரனிடம் போய் பாண்டவர்களை மறு விருந்துக்கு அழைக்கவும், சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்யவும் சம்மதிக்கும் படியும் அதற்கான அனுமதிகளை வழங்கும் படியும், ஆணைகளை இடும் படியும் வாதிடுகிறான். திருதராட்டிரன் எத்தனையோ புத்திமதிகளைக் கூறி சகுனியைத் திருத்த முயலுகிறான். பாரதி இந்தக் காட்சியைத் தனது அற்புதமான கவிதை வரிகளில் எடுத்துக் கூறுகிறார். "சோதரர்தம் முட்பகையுண்டோ-ஒரு சுற்றத்திலே பெருஞ்செற்றமோ? தம்மில் ஆதரங்கொண்டவரல்லரோ - முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் - அந்தச் சீதரன் தன் அருளாலும் ஓர் - பெருஞ் சீலத்தினாலும் புயவலி - கொண்டும் யாதொரு தீங்கும் இல்லாமலே - பிழைத் தெண்ணருங் கீர்த்தி பெற்றாரன்றோ?" என்று திருதராட்டிரன் சகுனியிடம் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார். யாதொரு தீங்குமில்லாமல் பிழைக்கவும், அருங் கீர்த்தி பெறவும், நல் வாழ்வும், புகழும் பெறவும் கண்ணனுடைய தண்ணருள், அத்துடன் பெரும சீலம் (சிறந்த குண நலன்கள்) புயவலி (தோள் பலம் - வல்லமை) ஆகியவற்றின் அவசியத்தையும் அவற்றைப் பாண்டவர் பெற்றிருந்தது பற்றியும் பாரதி அப்பாடல் வரிகளில் குறிப்பிட்டிருப்பதை நாம் நமது கருத்தில் கொள்ள வேண்டும். கண்ணனுக்கு முதல் மரியாதை செய்ததைக் குறை கூறிப் பேசிய சகுனியின் வார்த்தைகளுக்கு பதில் கூறும் முறையில் திருதராட்டிரன் கூறிய வாசகங்கள், வார்த்தைகள் கண்ணனைப் பற்றி பாரதி கொண்டிருந்த மிக உயர்வான கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. "ஆதி பரம் பொருள் நாரணன்-தெளி வாகிய பாற்கடல் மீதிலே - நல்ல சோதிப் பணா முடியாயிரம் - கொண்ட தொல்லறி வென்னு மோர் பாம்பின் மேல் - ஒரு போதத்துயில் கொளு நாயகன் - கலை போந்து புவிமிசை தோன்றினான் - இந்தச் சீதக்குவளை வழியினான் என்று செப்புவர் உண்மை தெரிந்தவர்" "நானெனும் ஆணவம் தள்ளலும்-இந்த ஞாலத்தைத் தான் எனக் கொள்ளலும் பர மோன நிலையினடத்தலும் - ஒரு மூவகைக் காலங் கடத்தலும் - நடு வான கருமங்கள் செய்தலும் - உயிர் யாவிற்கும் நல்லருள் பெய்தலும் - பிறர் ஊனைச் சிதைத்திடும் போதிலும் - தன துள்ள மருளினெகுதலும்" "ஆயிரங் கால முயற்சியால் - பெற லாவரிபேறுகள் ஞானிகள் - இவை தாயின் வயிற்றிற் பிறந்தன்றே - தமைச் சார்ந்து விளங்கப் பெறுவரேல்-இந்த மாயிரு ஞாலம் அவர் தமைத் -தெய்வ