பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி து. சீனிவாசன் மாண்புடையார் என்று போற்றுங் காண் - ஒரு பேயினை வேதம் உணர்த்தல் போல் - கண்ணன் பெற்றி உனக்கெவர் பேசுவார்" என்று திருதராஷ்டிரன் கூறுவதாகப் பாரதி பாடியுள்ள பாடல்கள் மிகச் சிறந்த தத்துவ ஞானக் கருத்துகளையும் கண்ணன் பெருமைகளையும் கொண்டதாக உள்ளது. ஆழ்வார்களின் பல பாசுரங்களுக்கு ஈடாக இந்த வரிகள் அமைந்துள்ளதைக் காண்கிறோம். திரெளபதி நீதி கேட்டு வாதிட்டாள். பாரத நாட்டின் வரலாற்றில் கதைகளில் இதிகாசங்களில் காப்பியங்களில் காவியங்களில் இதர இலக்கியங்களில் நீதி கேட்டு வாதிட்ட நியாயத்திற்காகப் போராடிய வீராங்கனைகள் பலர் உண்டு. ஜானகி இலங்கையில் அசோகவனத்தில் சத்திய விரதம் இருந்து அநியாயத்தை எதிர்த்தாள். இலங்கேஸ்வரனை எதிர்த்து அவனுக்கு புத்தி புகட்டி வாதிட்டாள். தனது கற்பு நிலையைக் காத்துச் சிறையில் இருந்தாள். "வில் பெருந்தடந்தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில் நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும், கற்பெனும் பெயரது ஒன்றும் களி நடம் புரியக் கண்டேன்" என்பது கம்பன் குறிப்பிடும் பாடலாகும். நற்பெறும் தவத்தளாய நங்கை இற்பிறப்பு இரும் பொறை, கற்பு என்னும் பெயர் கொண்ட நங்கையாக சீதையை அனுமன் குறிப்பிட்டு இராமனிடம் எடுத்துக் கூறுகிறான். பின்னர் அந்தக் கற்பு எனும் பெயர் கொண்ட நங்கை தனது கணவனது வீரத்தால் வெற்றி வாகையால் சிறை மீண்டாள். கண்ணகி, அநியாயமாகத் தனது கணவன் கொல்லப் பட்டதை எதிர்த்து பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு வழக்காடிதன் கணவன் குற்றவாளி அல்ல என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து நீதியை நிலைநாட்டி மதுரை நகரையே எரித்தாள். பாஞ்சாலி நீதி கேட்டுப்பெரியோர் சபையில் வாதிட்டாள். முதலில் தனது கணவர்களிடம், அம்மி மிதித்து அருந்ததி காட்டி அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்து இந்தப் பாதகர் முன்பு இப்படி அவமானப்படும் படி வன் விட்டீர்கள் எனக் கேட்கிறாள். விஜயனும் பீமனும் நெஞ்சுகுமுறி நின்றனர் தருமன் தலை குனிந்து இருந்தான். சபையில் வேறு பலரும் இருந்தனர். அறிவுடையோர், நல்லோர், வேள்வித்தவம் புரிந்த வேதியர் மற்றும் பலரும் இருந்தனர். அவர்களை நோக்கி பாஞ்சாலி முறையிட்டாள். அவர்களும் மெளனமாகவே தலை குனிந்து அமர்ந்திருந்தனர். "விம்மி அழுதாள் - விதியோ கணவரே அம்மி மிதித்தேயருந்ததியைக் காட்டியெனை வேச் சுடர் தீ முன் வேண்டி மனம் செய்து பாதகர் முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ என்றாள் விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே, குன்றாமணித் தோள் குறிப்புடனே நோக்கினார் தர்மனு மற்றாங்கே தலை குனிந்து நின்றிட்டான்." என்று கவிஞன் கண் கலங்கிக் கூறுகிறார். "பொருமியவள் பின்னும் புலம்புவாள் வான் சபையில் கேள்வி பலவுடையோர் கேடிலாநல்லிசையோர் வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள் மேலோர் இருக்கின்றீர் வெஞ்சின மென் கொள்கிலிரோ?. என்று கேட்டாள். கூடியிருந்த வேந்தர் பலரும் கட்டுண்டு வாய் மூடியிருந்தனர். அதை "வேலோரெனையுடைய வேந்தர் பிணிப் புண்டார். என்று பாரதி குறிப்பிடுகிறார். இவர்களையெல்லாம் சொல்லிக் குற்றமில்லை. மன்னர் சபைதனில் என்னைப்பிடித்து இழுத்து ஏச்சுக்கள் பலசொல்லி அவமானப்படுத்துவதைப் பார்த்து "உன்னை நிறுத்தடா என்று சொல்லுவதற்கு யாருமில்லையே என் செய்வேன்" என்று துடித்துக் கொண்டே தன் கணவன்மாரை நோக்கினாள். "இங்கவர் மேல் குற்ற மியம்ப வழியில்லை சபைதனிலே, என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுகள் சொல்லுகிறாய் நின்னையெவரும், "நிறுத்தடா என்பதிலர் என் செய்வேன் என்றே யிரைந்தழுதாள் பாண்டவரை மின் செய் கதிர் விழியால் வெந்நோக்கு நோக்கினாள் மற்றவர்தா முன்போல் வாயிழந்து சீர்குன்றி