பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் "சக்கர வர்த்தியென்றே - மேலாந் தன்மை படைத்திருந்தோம் பொக்கென ஓர் கணத்தே - எல்லாம் போகத் தொலைத்து விட்டாய்" "நாட்டையெல்லாம் தொலைத்தாய் - அண்ணே நாங்கள் பொருத்திருந்தோம் மீட்டும் எமையடிமை செய்தாய் மேலும் பொறுந்திருந்தோம்" துருபதன் மகளைத் திட்டத் துய் நன் உடன் பிறப்பை இருபகடை யென்றாய் - ஐயோ இவர்க் கடிமை செய்தாய்" "இனி பொருப்பதில்லை - தம்பி எளிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான்-அண்ணன் கையை எரித்திடுவோம்" என்று வீமன் கோபக் குரலில் சகாதேவனிடம் கூறியதை நம்மை நெஞ்சுருக வைத்து பாரதி தனது கவிதை வரிகளில் குறிப்பிடுவது அவலச் சுவையின் உச்சமாகும். தவறுகள் எந்த இடத்தில் ஏற்பட்டாலும் நடை பெற்றாலும் அதை எதிர்க்கும் இயல்பை வீமன் மூலம் பாரதி காட்டுகிறார். வீமன் சினம் மிகுந்து கூறிய இந்தக் கடுஞ்சொற்கள் விஜயனை உலுக்கி விட்டது. சூதர் சபைதனில் அனைவரின் முன்பாக அண்ணனை அந்தத் திரிலோகநாயகனை. தர்மத்தின் தலைமகனை கடிந்து பேசியது அர்ஜுனன் மனதை வலுவாக வருத்தியது. "மனமாரச் சொன்னாயோ? வீமா என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யார் முன்னே? சினமான தீயறிவைப் புகைத்தலாலே, திரிலோகநாயகனைச் சினந்து சொன்னாய்" என்று வீமனை அமைதிப்படுத்தி வில் விஜயன் கூறுகிறான். "தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகங்கற்கும் வழி தேடி விதி இந்த செய்கை செய்தான்" "கருமத்தை மேன் மேலும் காப்போம்-இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம்-காலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம் தனுவுண்டு காண்டிவம்' அதன் பேர் என்றான் இங்கு வீமனின் கோபத்தியும், வில் விஜயனின் தர்ம நீதியும் இணைந்து ஒரு புதிய அறத்தின் எழுச்சிக் குரலை எழுப்பியிருக்கிறது. அதன் முடிவில் க்ாண்டிவத்தின் நாண் ஒலி கேட்பதைக் காணலாம்.பாரதியின் இந்த கவிதைக் குரல் காலம் காலத்திற்கும் ஒலிக்கும் தர்மக் குரலாம். பாரதியின் இந்த அற்புதமான அபூர்வமான கவிதை வரிகள் அமரத்வம் வாய்ந்த வரிகளாகும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கவிதை வரிகள் மகாகவி பாரதியை உலகக் கவிஞர்களின் வரிசைக்கு உயர்த்தியிருக்கிறது.இந்தக் கவிதை வரிகள் தமிழ் மொழியை உலகின் தலைசிறந்த இலக்கிய மொழியின் வரிசைக்கு உயர்ந்தியிருக்கிறது. இந்தப் பாஞ்சாலி சபதக்காவியத்தின் மூலம், மகாகவி பாரதியும் தமிழ் மொழியும் பெருமையடைந்து உலகத் தரத்திற்கு உயர்த்திருக்கிறது. இந்த அரிய காவியத்தை உலக மொழிகள் அனைத்திலும் கொண்டு செல்ல வேண்டியது தமிழ் கூறும் நல்லுலகத்தின் தலையாய கடமையாகும். பாஞ்சாலியின் அழுகுரல் சபையில் மேலும் சலசலப்பை உண்டாக்கிற்று அர்ஜூனனின் வீர வார்த்தைகள் வீமனை அமைதிப்படுத்தியது. அதே சமயத்தில் சபையைக் கடுமையாக உலுக்கி விட்டது. பெரும் அச்சத்தை உண்டாக்கி விட்டது. வீமன் சினம் தணிந்து அண்ணனை வணங்கி நின்றனன்.அப்போது விகர்ணன் எழுந்தான்.விகர்ணன் நூற்றுவரில் ஒருவன். நூறு பேரில் தொண்ணுற்று ஒன்பது பேர் பொல்லாதவர்களாக இருந்தாலும் ஒருவனாவது நல்லவனாக இருப்பான் என்பதற்கு உதாரணமாக கெளரவர் கூட்டத்தில் விகர்ணன் இருந்தான். விகர்ணன்வயதில் இளையவன்.ஆயினும் அறத்தால் நிற்பவன். துரியோதனன் சபையிலும் துணிவுடன் நியாயத்தை எடுத்துக் கூறும் பண்பும் விவேகமும் மிக்கவன். சபையில் நடந்த வாதத்தில் பிதாமகர் கூறிய சொற்களுக்கு மறுப்பு கூறி நீதியையும் நியாயத்தையும் தர்மத்தையும் நடப்பையும் எடுத்துரைத்து விகர்ணன் எச்சரிக்கை செய்கிறான். இதைப் பாரதி மிகவும் அழகாக விவரித்துக் கதையைக் கொண்டு செல்கிறார். "அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான் பெண்ணரசி கேள்விக்குப்பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர் தம்மை,