பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் "புத்தம் புதிய கலைகள்- பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்க- அந்த மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை" என்றும், “அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை மெல்லத் தமிழ் இனிச்சாகும்- அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஒங்கும்" என்னும் வசை மொழியை அந்தப் பேதை உரைத்தான் என்று கண் கலங்கிப் பேசி, இந்த வசை மொழி எனக்கு எய்திடலாமோ? "சென்றிடுவீர் - எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்று தமிழ்த்தாய் தனது மக்களுக்கு ஆணையிடுவதாக பாரதி கூறுவது நம்மையெல்லாம் உணர்வூட்டித் தமிழை வளர்க்க அதற்காகச் செயலில் இறங்க ஊக்கப்படுத்துவதாகும். இந்த முழு நம்பிக்கையுடன் "தந்தை அருள் வழியாலும்- இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் இந்தப் பெரும் பழி தீரும்- புகழ் ஏறிப் புவி மிசையென்று மிருப்பேன்" என்று தமிழ்த்தாய் தன்னம்பிக்கை கொண்டிருப்பதை பாரதி எடுத்துக் காட்டியுள்ளார். பாரதி இந்தப் பாடலை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடியுள்ளார். நாடு அடிமைப்பட்டு அன்னிய ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில் பாடிய பாடலாகும் என்றாலும் இன்றும் இக்கருத்துக்குப் பொருத்தம் இருக்கிறது. நாடு விடுதலை பெற்று விட்டது. விடுதலை பெற்று அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்திய நாடும் தமிழகமும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. தொடர்ந்து முன் சென்று கொண்டிருக்கிறது. அனைத்துக் கலைகளும், கலைச் செல்வங்களும், பஞ்ச பூத நுட்பங்களும், அறிவியல் செல்வங்களும், தமிழில் கிடைக்க தமிழில் படிக்க, அத்துறைகளில் தமிழை வளர்க்க பாரதியின் கட்டளைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற முயற்சிகள் தொடர வேண்டும். மேலும் தமிழ் என்னும் தலைப்பிலான கவிதைகளில் பாரதி, தமிழ் மொழியின் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துக் கூறி அந்தப் பாரம்பரியத்தில் அடுத்து வரும் காலத்தில் தமிழுக்கும் தமிழ் மொழிக்கும். தமிழ்நாட்டிற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றி ஒரு விரிந்த செயல் திட்டத்தையே நம் முன் வைக்கிறார். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனியதாவது எங்கும் காணோம்" எனவே "தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கட்டளையிடுகிறார். "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" என்று பெருமையுடன் பேசும் பாரதி, "ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கிறோம் ஒரு சொற் கேளிர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்" என்று கட்டளையிடுகிறார். அத்துடன் தமிழ் வளர்ச்சிக்கு பாரதியின் செயல் திட்டம், "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் {}}}