பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் பேடியர் பிறர்க்கிச் சகம் பேசுவோர் கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடுங் கலை பயில் கென என்னை விடுத்தனன் அருமை மிக்க மயிலைப் பிரிந்து மிவ் வற்பர் கல்வியில் என் நெஞ்சு பொருந்துமோ? இந்திய மக்களை அடக்கி ஒடுக்கித் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் தங்களுடைய நிர்வாக முறையை நிறுவினார்கள். இந்த நிர்வாக முறையின் அடிப்படை நோக்கம், இந்த நாட்டில் ஆங்கிலேய ஆட்சியின் நலன்களைப் பாதுகாப்பதும், அதற்காக இந்திய மக்களைத் தங்களது ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதுமேயாகும். அத்தகைய நிர்வாக அமைப்பிற்கும் அவர்களுடைய வாணிபம், செய்திப்போக்குவரத்து ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், போக்குவரத்து முதலிய அவர்களுக்கு தேவையான துறைகளுக்கும் அவசியமான அதிகாரிகளை, அலுவலர்களை மற்றும் தேவையான பணியாளர்களைப் பயிற்சி கொடுத்து உருவாக்குவதற்கான வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலக் கல்வி முறை உருவாயிற்று. இந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஞானத்தை அறிவை பெறுவதற்கான கல்வியாக அது இருக்கவில்லை. அதைப் பற்றித் தெளிவாக பாரதி தனது கல்வித்திட்டத்தின் பகுதியாக மேலும் கூறுகிறார். "கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள்வானி லோர் மீன் நிலை தேர்ந்திலர் அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலர் வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டின் பொருள் கெடல் கேட்டிலார் துணியும், ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எட்டுனைப் பயனும் கண்டிலார்" எனது தனது கவிதையில் கூறுகிறார். மேலும், "கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்து கோளையும் மீனையும் ஒர்ந்து அளந்த தோர் பாஸ்கரன் மாட்சியும், நம்பருந்திற லோடு ஒரு பாணினி, ஞான மீதில் இலக்கணம் கண்டதும், இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல் புணர்த்திய சங்கரன் ஏற்றமும்' சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான் மறை செய்ததும், பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பாரளித்துத் தர்மம் வளர்த்ததும், பேரருள் சுடர்வாள் கொண்டு அசோகனார் பிழை படாது புவித்தலம் காத்ததும், வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீய கோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்" "அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுனர் முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள் என்று கூறி மற்றெங்க ணுணர்த்துவேன் இங்கி வர்க்கெனதுள்ள மெரிவதே" 'ஐயர் என்றும் துரையென்றும் மற்றெனக்கு ஆங்கிலக் கலை யென்றொன்றுணர்த்திய பொய்யருக்கிது கூறுவன் கேட்பிரேல் பொழுதெலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் மெய் அயர்ந்து விழி குழி வெய்திட, வீறிழந்து எனதுள்ளம் நொய்தாகிட" "ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கி யென் அறிவு வாரித்துரும் பென்றலைந்ததால், செலவு தந்தைக்கு ஒராயிரஞ் சென்றது தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன