பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் bறி எடுத்துக் கூறுகிறார். "மாற்றலர் தம் புலை நாற்றமே யறியா ஆற்றல் கொண்டிருந்த திவ்வரும் புகழ் நாடு" என்று குறிப்பிடுகிறார். "வேத நூல் பழிக்கும் வெளித்திசைமிலேச்சர், பாதமும் பொருப்பளோ பாரத தேவி" என்று கூறுகிறார். "வீரரும் வரிசை விரித்திடு புலவரும் பாரெல்லாம் பெரும் புகழ் பரப்பிய நாடு" என்றும் கூறுகிறார். "தர்மமே உருவாய்த் தழைத்த பேரரசரும் நிர்மல முனிவரும் நிறைந்த நன்னாடு' என்றும், வீரரைப் பெறாத மென்மை நீர் மங்கையை ஊரவர் மலடி என்று ரைத்த திரு நாடு என்று கூறி "பாரத பூமி பழம் பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவறகற்றாதீர்" என்று படை வீரர்களுக்கு வீரமூட்டுகிறார். "பன்னரும் புகழுடை பார்த்தனும் கண்ணனும் வீமனும், துரோணனும், வீட்டுமன் தானும் ராமனும் வேறுள இருந்திறல் வீரரும் நற்றுணை புரிவர் வானக நாடுறும், வெற்றியேயன்றி வேறெதும் பெருகிலேம்" ான்று நம்பிக்கையூட்டுகிறார். 'வஞ்சகர், தீயர், மனிதரை வருத்து வோர் நெச்சகத் தருக்குடை நீசர்கள்-இன்னோர் நம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மை யோடொறுத்தல் வீரர்தம் செயலாம்." என்று கீதையின் தத்துவ சாரத்தை எடுத்துக் காட்டி, "பேடிமை யகற்று நின் பெருமையை மறந்திடேல், ஈடிலாப் புகழினாய் எழுகவோ எழுக" என்று உணர்வூட்டி அன்னியரை எதிர்த்துப் போரிட அறை கூவல் விட்டு அனைவரையும் அழைக்கிறார். குருகோவிந்தர் "ஆயிரத்தெழு நூற்றம்பைத் தாறு. விக்ரமனாண்டு, வீரருக்கமுதாம், ஆனந்த புரத்திலார்ந்தினி திருந்தனன் பாஞ்சாலத்துப் படர் தரு சிங்கக் குலத்தினை வகுத்த குரு மணியா வான் ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன் வானம் வீழ்ந்து திரியினும் வாள் கொடு தடுக்கும் வீரர் நாயகன் மேதினி காத்த, குரு கோவிந்த சிங்க மாங் கோமகன்." சீக்கி யர் பெருமக்களைக் கொண்ட பெரும் கூட்டத்தைத் திரட்டி காலாசா அமைப்பை உருவாக்கி, கொள்கை அறிக்கை விடுத்தான், குரு கோவிந்தர் தலைமையில் அவர்களுடைய சீடர்கள் திரண்டு காலாசா அமைப்பின் மூலம் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். "சீடர்கள் அனைவரும் தீட்சையிஃ தடைந்தனர், ஐயன் சொல்வான் அன்பர்காள் நீவிர் செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம், அமிர்த மென்றறிமின் அரும் பேராமிது பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் நுமக்கினித் தரும நுவன்றிடக் கேண் மின்." என்று தொடங்கித் தங்கள் கொள்கைப் பிரகடனத்தைச் செய்தார்.