பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவசங் "ஒன்றாம் கடவுள் உல கிடைத் தோன்றிய மானிடர் எல்லாம் சோதரர் மானுடர் சமத்துவ முடையார் சுதந்திரம் சார்ந்தவர் சீடர்கள், குலத்தினும் செயலினும் அனைத்தினும் இக்கணம் தொட்டு நீர் யாவரும் ஒன்றே பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல், ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி வகுப்பவர் வகுத்து மாய்க, நீரனை விரும் தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம் என்பவை போற்ற எழுந்திடும் வீரச் சாதி ஒன்றனையே சார்ந்தோராவீர். அநீதியும் கொடுமையும் அழித்திடும் சாதி மழித்திடல் அறியா வன்முக சாதி இரும்பு முதிரையும் இறுகிய கச்சையும் கையினில் வாழும், கழன்றிடாச்சாதி சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி அரசனில்லாது தெய்வமேயரசா மானுடர் துணை வரா மறமே பகை யாக் குடியரசியற்றும் கொள்கையர் சாதி அறத்தினை வெறுக்கிலிர், மறத்தினைப் பொறுக்கிலிர் தாய்த்திரு நாட்டைச் சந்த தம் போற்றிப் புகழொடு வாழ் மின் புகழொடு வாழ் மின் என்றுரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன் அவனடி போற்றி யார்த்தனர் சீடர்கள் குரு கோவிந்தக் கோமகனாட்டிய கொடியுயர்ந்தசையக் குவலயம் புகழ்ந்த ஆடியே மாய்ந்த தவுரங்கசீப் ஆட்சி" என்று பாரதி கூறி முடிக்கிறார். 를 ՅՑ 4. தேசியத் தலைவர்கள் பற்றி பாரதி நமது நாட்டின் தேசீய விடுதலை இயக்கத்தில் முன்னணியில நின்றார் என்பதை அனைவரும் அறிவர். அவர் தேசீய மகாகவி புரட்சிக ஜனநாயகப் பெரும் புலவராக விளங்கியவர். சிறந்த பத்திரிகையாளராகவு பணியாற்றியுள்ளார். பத்திரிகைத் துறையில் புதிய பல உத்திகளைய கையாண்டு தமிழ்ப் பத்திரிகைத்துறைக்கு முன்னோடியாக விளங்கியுள்ளாா அவர் தேசிய காங்கிரஸ் மகாசபையில் தீவிரவாதப் பிரிவுக்கு ஆதரவளித்தார். வடக்கில் பாலகங்காதரத்திலகர், லாலா லஜபதிராய், விபின் சந்திரபால் முதலியவர்களுக்கு ஆதரவு கொடுத்தார். தமிழ்நாட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சிங்காரவேல் செட்டியார். மண்டயம் சீனிவாசாச் சாரியார், வ.வே.சு அய்யர் முதலியவர்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்றி வந்தார். பின்னர் தாகூர், மகாத்மா காந்தி ஆகியோருக்கு ஆதரவளித்தார்.ஆயினும், கால மாற்றத்தாலும், காலத்தின் கட்டாயத்தாலும், சூழ்நிலைகளின் காரணங்களாலும் பாரதி தனது அரசியல், தத்துவ சமுதாயக் கருத்துக்களைச் சற்று திருத்தியும், மாற்றியும் வெளிப்படுத்தியிருந்தாலும், அவருடைய தீவிரக் கருத்துக்களே அவருடைய கவிதைகளில் உயிரும் உணர்வுமாக இழையோடித் தனித்தன்மை பெற்றிருக்கின்றன. பாரதி தனது பாடல் தொகுப்புகளில் தாகூர், மகாத்மா காந்தி, பால கங்காதரத்திலகர், வ.உ.சிதம்பரம் பிள்ளை. தாதாபாய் நவுரோஜி. விவேகானந்தர், லாலா லஜபதிராய் முதலியோரைப் பற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார். பாரதி பாடிய தேசீய கீதங்களில் பாரத மாதா நவரத்தினமாலை ஒரு சிறந்த பாடலாகும். இப்பாடலில் ரவீந்திரநாதரைக் குறிப்பிடுகிறார். மோகனதாஸ் கரம் சந்திர காந்தியைப் பாராட்டிப் போற்றுகிறார். பாரதம் காட்டவல்ல புதிய நெறியைக் காட்டுகிறார். "அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம் ஆணி முத்துப் போன்ற மணி மொழிகளாலே, பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள் பாவு புகழ் புராணங்கள் இதிகாசங்கள் இன்னும் பன்னூல்களிலே இசைத்த ஞானம், என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனையிந்நாள் மின்னுகின்ற போரொளி காண் காலம் கொன்ற