பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் ட்டின் பாரம்பரியமான அறவழி அரசியலை நினைவு கூர்ந்து அந்த மரபு ழியில் பாரதி காந்தியையும் காண்கிறார். தாதாபாய் நவுரோஜி தாதாபாய் நவுரோஜி பாரதத்தாய் பெற்றெடுத்த தவப் புதல்வர்களில் ஒருவர். தேசீய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். இந்திய தேசீய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கியவர். இந்திய நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடத்திய பொருளாதாரச் சுரண்டல் கொள்கையைத் தொகுத்து எழுதி அந்த அவலங்களை உலகிற்கு எடுத்துக் காட்டியவர். அந்த மகானைப் பற்றி, பாரதி, "முன்னாளில் இராமபிரான் கோதமனரா திய புதல்வர் முறையினின்று பன்னாடு முடி வணங்கத் தலைமை நிறுத் திய வெமது பாரத கண்ட மதில்" என்று தொடங்கி இந்நாளில் ஏற்பட்டுள்ளதுயர் தவிர்க்க வந்த முதியோன் என்று தொடங்கி அதைத் தொடர்ந்து, "கல்வியைப் போல் அறிவும், அறிவினைப் போல கருணையும் அக்கருணையைப் போலப் பல்வித ஊக்கங்கள் செய்யும் திறனுமொரு நிகரின்றிப் படைத்த வீரன்' என்றும் "வில்லிறலாற் போய் செய்தல் பயனிலதா மெனவதனை வெறுத்தேயுண்மைச் சொல் விறலால் போர் செய்வோன் பிறர்க் கன்றித் தனக்குழை யாத்துறவி யாவோன்" என்றும், "தாதாவாய் விளங்குறு நற்றாதாவாய் நவுரோஜி சரணம் வாழ்க" என்று புகழ்ந்து பாராட்டிப் பாடுகிறார். லோகமான்ய பால கங்காதரத் திலகர் இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் திலகர் பெருமான். "சுதந்திரம் எனது பிறப்புரிமை" என்று கூறியவர். அன்னிய ஆட்சியிலிருந்து பாரத நாடு விடுதலை பெறுவதற்கு மிகத் தீவிரமாகப் போராடியவர். இந்திய தேசீயக் காங்கிரசில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவுகள் ஏற்பட்டது. அதில் தீவிரவாதிகள் பிரிவின் தலைவராக திலகர் விளங்கினார். திலகர் மீது பாரதி மிகவும் பற்று கொண்டவராக இருந்தனார். 1905 ஆம் ஆண்டுகளில் தேசீய காங்கிரஸ் மகாசபையில் தீவிரவாதிகள் என்றும், மிதவாதிகள் என்றும் பிரிவுகள் தோன்றிய போது திலகர், லஜபதிராய், போன்றோர் தீவிரவாதிகளின் தலைவர்களாக இருந்தனர். பாரதி தீவிரவாதிகளை ஆதரித்தார். அந்த முறையில் திலகரைப் பற்றியும், லஜபதிராய் அவர்களைப் பற்றியும் சிறந்த பாடல்களை பாரதி பாடியுள்ளார். "வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே' என்னும் பாரதியின் பாடல் அக்காலத்தில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாகும். சுதந்திரப் போராட்டத்தில் மக்களுக்கு உணர்வும் ஊக்கமும் ஊட்டுவதற்கு தேசபக்தர்களுக்கு இப்பாடல் ஒரு பேராயுதமாக விளங்கியது. "வாழ்கத் திலகன் நாமம் வாழ்க வாழ்கவே வீழ்கக் கொடுங்கோன்மை வீழ்க வீழ்கவே" என்னும் வீர முழக்கத்துடன் இப்பாடல் துவங் குகிறது. 'நாலு திசையும் ஸ்வாதந்தரிய நாதம் எழுகவே நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே, ஏலுமனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே" என்று அவ்வீர முழக்கம் வேகத்துடன் தொடர்கிறது. "கல்வி யென்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான்- நல்ல கருத்தினால தனைச் சூழ்ந்தொர் அகழி வெட்டினான்