பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் சொல் விளக்க மென்ற தனிடைக் கோயிலாக்கினான் ஸ்வாதந் தர்ய மென்ற தன் மேல் கொடியைத் தூக்கினான்" என்றும், "துன்பம் என்னும் கடலைக் கடக்கும் தோனியவன் பெயர், சோர் பெனும் பேயை ஒட்டும் சூழ்ச்சி அவன் பெயர் அன்பெனும் தேனுறித்ததும்பும் புதுமலர் அவன் பெயர் ஆண்மை யென்னும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன் பெயர்" என்னும் விடுதலை முழக்கங்களைத் திலகன் நாமத்தின் வீர முழக்கங்களாக பாரதி பாடல் மக்களிடம், விடுதலைப்போராட்ட வீரர்களிடம் இடம்பெற்றது. விடுதலைப்போராட்டத்தின்தணியாததாகமாக பாரதி பாடல் விளங்கியது. தேச விடுதலையுடன் அச்சம் ஒழியவும், கல்வியும் நல்ல கருத்துக்களும் வளரவும், துன்பத்தைத் துடைக்கவும், சோர்வு எனும் பேய்களை விரட்டவும், அன்பை வளர்க்கவும், ஆண்மை ஓங்கவும், பாரதி திலகன் பெயரால் பாடுகிறார். அச்சமும், கல்லாமையும், துன்பங்களையும் சோர்வும், அடிமைத்தனத்தோடு இணைந்தவை. எனவே அடிமைத்தனம் போகும்போது அதனுடன் இணைந்துள்ள இதர தீமைகளும் நீங்கும் என்பது பாரதியின் முழு விடுதலை தத்துவமாகும். லாலா லஜபதி ராய் லாலா லஜபதி ராய் பாஞ்சாலசிங்கம் என்று புகழ் பெற்றவர். தேசிய விடுதலை இயக்கத்தின் தீவிரவாதப் பிரிவில் முன்னணியில் நின்றவர். விடுதலைப் போராட்டத்தில் பாஞ்சால மக்கள் மிகுந்த வீரத்துடனும் வேகத்துடனும் கலந்து கொண்டனர்.ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பாஞ்சால மக்கள் மீது தங்கள் கொடிய அடக்கு முறையை ஏவி விட்டார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகள் வெறி பிடித்து ரெளலத் சட்டத்தை அமுல் படுத்தினார்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தினார்கள். அந்த வீரமிக்க விடுதலைப் போராட்டத்தின் தலைவன் லாலா லஜபதி ராயை நெஞ்சிலே லத்திகளால் அடித்து குற்றுயிராக்கி கொடுந்தண்டனை கொடுத்து நாடு கடத்தி பர்மாவிலுள்ள மாண்டலே சிறையில் அடைத்தனர். அவர் நினைவாக பாரதி எழுதிய பாடல் நெஞ்சை உருக்கும் ஒரு நிகரில்லாத இலக்கியமாகும் "விண்ணகத் தேயிரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ?" என்று தொடங்கிலஜபதியை நாடுகடத்தி வெகுதொலைவில் கொண்டு போய் வைத்தாலும் அவனது வீரத்தை மறக்க மாட்டோம். மக்களுடைய விடுதலைப் போராட்டம் அவனிடமிருந்து ஆதர்சத்தைப் பெறும் நல்லவர்களுக்கு சோதனைகள் ஏற்படுவதை நாடு கண்டிருக்கிறது என்று பாரதி கூறுகிறார். "பேரன்பு செய்தாரில் யாவரே பெருந்துயரம் பிழைத்து நின்றார் ஆரன்பு நாரணன் பால் இரணியன் சேய், செய்ததினால் அவனுக்குற்ற கோரங்கள் சொலத்தகமோ? பாரத நாட்டில் பத்தி குலவி வாழும், வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம் பலவடைதல் வியத்தற் கொன்றோ" என்று பாடி நமக்கு பாரதி ஆறுதல் கூறுகிறார். நாரணன் மீது அன்பு கொண்ட பிரகலாதன் அடைந்த துன்பங்களை ஒப்பிட்டு லஜபதி தன் தாய்நாட்டின் மீது அன்பு கொண்ட காரணத்தால் இரணியனைப்போல கொடுங்கோல் ஆட்சியாளர்களான வெள்ளையர் ஆட்சி அவர் மீது இழைத்த கொடுமைகளைச் சுட்டிக் காட்டியது சிறப்பாகும். அது பாரதி வழியாகும். லஜபதிராய் பிரலாபம் என்னும் தலைப்பில் பாரதி எழுதியுள்ள பாடல் மிகச் சிறந்த ஒரு இலக்கிய மலராக அமைந்துள்ளது.பாரதியின்இந்தப்பாடல் சிறப்பு மிக்கது. அதற்கு ஈடு இணையில்லை. லஜபதி ராய் நாடு கடத்தப்பட்டு மாண்டலேசிறையில் அடைபட்டுக்கிடக்கும்போது தனது பிறந்த மண்ணை நினைந்து எண்ணமிடும் காட்சியாக பாரதி இப்பாடலை அமைத்துள்ளார். "நாடிழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து வீடிழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே