பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தள் ல் பாரதி சீனிவாசன் o நிதி து ஆங்கிலேய அதிகாரி சுதேசபக்தன் சிதம்பரம் பிள்ளைக்குக் கூறியதாக உள்ள பாடல் 1. "நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் கனல்- மூட்டினாய் வாட்டியுன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன் வலி- காட்டுவேன்." 2. "கூட்டம் கூடி வந்தே மாதரம் என்று கோஷித்தாய்-எமை தூவித்தாய் ஓட்டம் நாங்கள் எடுக்க வென்றே கப்பல் ஒட்டினாய்-பொருள் ஈட்டினாய்" 3. கோழைப் பட்ட ஜனங்களுக்குண்மைகள் கூறினாய்-சட்ட மீறினாய் ஏழைப் பட்டிங்கிறத்தல் இழி வென்றே யேசினாய்- வீரம் பேசினாய்" 4. "அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் ஆக்கினாய் - புன்மை போக்கினாய் மிடிமை போதும் நமக்கொன்றிருந்தோரை மீட்டினாய் - ஆசை - பூட்டினாய்" 5. "தொண்டொன்றே தொழிலாக் கொண்டிருந்தோரைத் தூண்டினாய் - புகழ்-வேண்டிாய் கண்ட கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய் - சோர்வை-யோட்டினாய்" 6. "எங்கும் இந்த ஸ்வராஜ்ய விருப்பத்தை ஏவினாய் - விதை - துவினாய் சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல் செய்யவோ - நீங்கள்- உய்யவோ 7. "சுட்டு வீழ்த்தியே புத்தி வகுத்திடச் சொல்லுவேன்-குத்திக் கொல்லுவேன் தட்டிப் பேசுவோருண்டோ? சிறைக்குள்ளே தள்ளுவேன்- பழி-கொள்ளுவேன்." இந்தப் பாடல் வரிகள், அன்று நாட்டை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளின் கொடுங்கோலாட்சி முறையையும் அவர்களுடைய அதிகார தோரணையும் தெளிவாக வெளிப்படுத்திக காட்டுகிறது. இந்த ஆணவம் மிகுந்த ஆங்கிலேய அதிகாரியின் மிரட்டல்களுக்கெல்லாம் பணியாது தேசபக்தன் சிதம்பரம் பிள்ளை பதில் கூறுவதாகபாரதி மிகவும் அற்புதமாக சுதந்திர உணர்வுடன் வெளிப்படுத்தும் அருமையான பாடல், 1. "சொந்த நாட்டில் பார்க்கடிமை செய்தே துஞ்சிடோம்-இனி-அஞ்சிடோம் எந்த நாட்டினுமிந்த அநீதிகள் ஏற்குமோ-தெய்வம்- பார்க்குமோ?" 2. "வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை வாழ்த்துவோம்-முடிதாழ்த்துவோம் எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல் ஈனமோ - அவ- மானமோ?" 3. "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ- நாங்கள் - சாகவோ? அழுது கொண்டிருப்போமோ ஆண் பிள்ளைகள் நாங்கள் அல்லமோ? - உயிர் - வெல்லமோ?" 4. "நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ - பன்றிச்-சேய்களோ நீங்கள் மட்டும் மனிதர்களே விது நீதமோ - பிடி-வாதமோ?" 5. பாரதத் திடை அன்பு செலுத்துதல் பாபமோ - மனஸ்தாபமோ?