பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

stro பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் கூறுமெங்கள் மிடிமையைத் தீர்ப்பது குற்றமோ - இதிற் - செற்றமோ?" 6. "ஒற்றுமை வழியொன்றே வழியென்ப தோர்ந்திட்டோம் - நன்கு - தேர்ந்திட்டோம் மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கெல்லாம் மலைவுரோம் - சித்தம்- கலைவுறோம்" 7. "சதையைத்துண்டு துண்டாக்கினும் உன்னெண்ணம் சாயுமோ? - ஜீவன் - ஒயுமோ? இயத்துள்ளே இலங்கு மகா பக்தி யேகுமோ - நெஞ்சம் - வேகுமோ?" என்று நெஞ்சுருகப் பாடுகிறார். இந்தப் பாடல்கள் தனிச் சிறப்பு மிக்க பாடல்களாகும். அக்காலத்திய தேச பக்தர்களின் விடுதலை உணர்வையும் உள்ளத்தின் உறுதிப் பாட்டையும், தேச பக்தி வேகத்தையும் இப்பாடல்கள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. பாரதியின் இந்த உணர்ச்சி மிக்க பாடல்களுக்கு இணையீடான பாடல்களை வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. பாரதி இன்னும் தேசபக்திச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நினைத்து மேலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவையெல்லாம் நமது உள்ளத்தின் அடி ஆழத்தைத் தொடுகின்றன. "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்? என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்? என்றெ மெதன்மையின் விலங்குகள் போகும்? என்றெமெதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே? ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே! வென்றி தரும் துணை நின்னருளன்றோ? மெய்யடியோம் இனும் வாடுதல் நன்றோ?' என்றும், "இதந்தரு மனையினிங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும் பதந்தருவிரண்டு மாறிப் பழி மிகுந்திழிவுற்றாலும் விதந்தரு கோடியின்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திர தேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே!" என்றெல்லாம் தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் நினைவாக மகாகவி நெஞ்சுருகப் பாடுகிறார். வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்ரமணிய சிவா ஆகியோருடன் நேரடியாக அறிமுகமாகித் தொடர்பு கொண்டிருந்த மகாகவி பாரதி, சிதம்பரம் பிள்ளை சிறையிலடைக்கப்பட்ட போது எழுதிய பாடல், "வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்றே கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக்கோவே தாளாண்மை சிறிது கொலோயாம் புரிவோம் நீ இறைக்கும் தவங்கள் ஆற்றி வாளாண்மை நின் துணைவர் பெறுகெனவே வாழ்த்துதி நீவாழ்தி வாழ்தி" என்று பாரதி தேசபக்தரை வாழ்த்திப் பாடுகிறார். ஞான பானு வ.உசிதம்பரம்பிள்ளையுடன் விடுதலை வேள்வியில் உடனிருந்து பங்கு கொண்டவர் சுப்பிரமணிய சிவா. சிவா ஒரு சிறந்த தேசபக்தர். விடுதலை வீரர். தியாகச் செம்மல். அன்னிய ஆட்சியாளர்களின் அடக்குமுறைக் கொடுமைகளால் சிவா அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. அந்த மாபெரும் தியாகியைப் பற்றிய செய்திகளை நமது நாட்டு மக்கள் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். சிவா ஒரு சிறந்த எழுத்தாளர். உணர்ச்சி மிக்க பேச்சாளர். அவர் ஞானபானு என்னும் பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார். அதற்கு நல்வாழ்த்துக்கள் கூறி பாரதி எழுதிய பாடல், 1. "திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம் மருவு பல்கலையின் வல்லமை என்ப வெல்லாம், வருவது ஞானத்தாலே வையக முழுது மெங்கள், பெருமை தான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபானு'