பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் 2. "கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமைத்துன்பம் அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையச்சம் இவையெல்லாம் அறிவிலாமை என்ப தோர் இருளிற் பேயாம் நவமுறு ஞானபானு நண்ணுக, தொலைக பேய்கள்" 3. "அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர் மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம், தினத்தொழி ஞானம் கண்டீர் இரண் டுமே சேர்ந்தால் வானோர் இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்றி வைக்கும் வேதம்" 4. "பண்ணிய முயற்சி யெல்லாம் பயனுற வோங்க மாங்கே எண்ணிய எண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும், திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும் நண்ணிடு ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்" என்பது பாரதி எழுதிய முழுமையான வாழ்த்துப்பாடலாகும். பாரதநாட்டின் மரபுவழியில் பொருள் பொதிந்த இந்தக் கவிதையை பாரதி தனது தோழனின் தியாகத்திற்கும் ஓய்வில்லாத உழைப்பிற்கும், அறிவுக்கும் பாரத மாதாவின் திருப்பணிக்கும் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். பாரதிதன் காலத்திய தேசிய இயக்கத்தலைவர்களைப் பற்றிப்பாடியதுடன் ஒவ்வொரு துறையிலும் சிறந்த விளங்கிய அறிஞர்களைப் பற்றியும் தனது கவிதைகளில் பாராட்டியுள்ளார். என்றும் தமிழோடு இருக்கும் தாயுமானவர். அருளுக்கு நிவேதனமாய அன்பினுக்கு ஒரு கோயிலாக அமைந்த நிவேதிதா தேவி, சுருதியும், அரிய உபநிடத்தின் தொகுதியும் பழுதா உணர்ந்த அபேதானந்த சுவாமிகள். ஓவிய | || மணி இரவிவர்மா, இசையில் வல்ல சுப்பராம தீட்சதர், தமிழுக்குப் புத்துயி தந்த தமிழ்த்தாத்தா மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதய்யர் ஆகியோரின் ஆற்றல் அறிவுச் செல்வம் குறித்தும் அழகிய பாடல்கள் பாடியுள்ளார் இப்பாடல்களெல்லாம் அறிவும் ஆற்றலும் எங்கிருந்தாலும், அவற்றைப் போற்றும் பாரதியின் பரந்த உள்ளத்தைக் காட்டுகின்றன. காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் பாரதி ஒரு தடவை காரைக்குடி சென்றிருந்தார். அங்கு நகரத்தா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் சேர்ந்து இந்து மதாபிமான சங்கம் என்னும் பெயரில் ஒரு சங்கம் அமைத்து பல்வேறு தொண்டுகள் செய்து செயல்பட்டுக் கொண்டு வந்தார்கள். அதைக் கண்டு பாரதி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்த இளைஞர்கள் பிற்காலத்தில் கம்பன் கழகம் அமைத்து கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்த்த சான்றோர்களான சா கணேசன், ராய.சொக்கலிங்கம் முதலியோராவர். அந்த இளைஞர்களையும் அவர்களுடைய அமைப்பையும் அவர்களுடைய நற்பணிகளையும் பாராட்டி மகாகவி பாரதி அருமையானதொரு வாழ்த்துப் பாடலைப்பாடி அவர்களை ஊக்குவித்தார். அப்பாடலில் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவத்தை அதன் மூலக் கருத்தை சுருக்கமாகத் தனக்கே உரித்தான கவிதை வடிவில் பாரதி வடித்துக் காட்டியுள்ளார். "மண்ணுலகின் மீதினிலே யெக்காலும் அமரரைப் போல் மடிவில்லாமல் திண்ண முறை வாழ்ந்திடலாம் அதற்குரிய உபாயம் இங்கு செப்பக் கேளி' என்று தொடங்கி, திண்ணிய நல்லறி வொளியாய்த் திகழுமொரு பரம்பொருளைக்" குறிப்பிட்டு "செய்கையெலாம் அதன் செய்கை நினைவெல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம், உய்கையுற நாமாகி நமக்குள்ளே ஒளிர்வதென உறுதி கொண்டு பொய், கயமை, சினம், சோம்பர், கவலை,