பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் 5. பாரதியின் புது நெறி பாரத நாட்டின் பண்பாட்டு தளத்தில் நின்று பாரதி தனது கவிதைகளை, கதைகளை, கட்டுரைகளை எழுதி புது நெறி காட்டியுள்ளார். நமது வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கதைகள், தமிழகத்தில் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள், சங்ககாலப் புலவர்கள், சான்றோர், சமணச் சான்றோர். ஒளவையார், ஆழ்வார்கள். நாயன்மார்கள், சமயக்குரவர்கள். சித்தர்கள். தாயுமானவர். அருணகிரியார், வள்ளலார் முதலியோர்களின் கருத்துக்கள், காவியங்கள், கவிதைகள் ஆகியவற்றின் வழி வழியாக வந்த மாபெரும் கவிஞனாக பாரதி தமிழ்நாட்டில் தோன்றி தமிழ்நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும். தமிழ்ப் பண்பாட்டிற்கும் பாரதப் பண்பாட்டிற்கும் தமிழகத்தின், பாரதத்தின் உலகின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டியாக நிற்கிறார். பாரதி காட்டியுள்ள புது நெறி சிலவற்றை இந்நூலின் நிறைவுரையாக நாம் நினைவில் கொண்டு நமது செயலாக்கத்திற்கும் செயலூக்கத்திற்கும் வழி காட்டியாகக் கொள்ளலாம். பாரதியின் குரலோசைப் படி அச்சம் தீர வேண்டும். அமுதம் விளைய வேண்டும். வித்தைகள் வளர வேண்டும். வேள்விகள், முயற்சிகள் ஓங்க வேண்டும். நாம் அனைவரும் இங்கு இவ்வுலகில் அமரத்வம் பெறலாம். மனதில் சலனமில்லாமல் உறுதி ஏற்பட வேண்டும். மதியில் இருள் படராமல் ஒளி ஓங்கச் செய்ய வேண்டும். அனைவரும் அறிவும் ஆற்றலும் பெற்று அனைத்து செல்வங்களும் பெற்று நூறு வயது வரை நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும். இவையெல்லாம் தானாக வராது. அதற்கான முயற்சிகள் கடும் முயற்சிகள், செயல் இடைவிடாத செயல், ஒருமுகப்படுத்தி மனதையும், செயலை ஈடுபடுத்துதல், அதன்மூலம் ஞானமும் நல்லறிவும் பெறுதலும் வேண்டும். எல்லாம் வல்ல இறைவனின் அருளும் வேண்டும். அப்போது முக்தி - விடுதலை பெறலாம். இந்த உலகிலேயே அந்த விடுதலை பெறலாம். கடமை என்பது என்ன? தன்னைக்கட்டுதல், பிறர் துயர்தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், உலகெலாம் காக்கும் ஒருவனைப்போற்றுதல் ஆகும்.இதில்தனி மனித உரிமையும் மனித சமுதாய நல உரிமையும் அடங்கியிருக்கிறது. திடமான மன உறுதியும் அர்ப்பணிப்பும் அதற்கு அவசியமாகிறது. கடமைகளைச் சரியாக, சீராக செம்மையாக நிறைவேற்ற முயலும் அதன் பயன்கள் அறம் பொருள். இன்பம், வீடு ஆகிய நான்குமாகும். இதை வடமொழியில் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்கனவே முதலாவது அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அறம், பொருள், இன்பம், வீடு என்னும் சொற்களுக்கான பாரதியின் கருத்தும் விளக்கமும், முற்றிலும் புதுமைய இருக்கின்றன. அவ்ை சாதாரண விளக்கங்களிலிருந்து வேறுபட்டதா இருப்பதையும் காண்கிறோம். அறம், பொருள். இன்பம், வீடு என்னும் பயன்பாடுகளுக்கு நீதி வகுத்த சுக்கிரன், வியாழன், வசிட்டர், வாம தேவர், வியாசர், விதுரர். வால்மீகி, மனு, பொருள், சாத்திரம் வகுத்தகெளடில்யர் (சாணக்கியர்) மற்றும் தென்மொழியில் இப்புருஷார்த்தங்களை வகுத்த வள்ளுவன், கம்பன், இளங்கோவும் தமிழ இலக்கணம் பாடிய அகத்தியன், தொல்காப்பியன், சமணச்சான்றோ முதலியோர்களும் மற்றவர்களும் கூறிய சீரிய சிறந்த கருத்துக்களையெல்லா கிரகித்து அவைகளுக்கெல்லாம் புதிய காலத்திற்கேற்ற மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்து பாரதி தனது காலத்தில் புதிய காலத்திற்கு ஏற்ப தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அவை புதிய பரிமாணங்களையும் பெற்றிருக்கின்றன. இவை அனைத்தையும் பாரதி தனக்கே உரிய தனித்தன்மையுடன் எடுத்து வெளிப்படுத்தியுள்ளதையும் நாம் நன்கு காண முடிகிறது. அறம் என்பது தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் தன்னிலை, முன்னிலை, புறநிலை, அகநிலை உறவுகளின் பாலுள்ள கடமைகள் அனைத்தும் அடங்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் தனிமனிதனுக்கும்தனிமனிதனுக்கும், ஆசிரியனுக்கும் மாணாக்கனுக்கும்,தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும், இடையிலுள்ள அவர்களின் பரஸ்பர உறவுகளின் பாலுள்ள கடமைகள், தனிமனித தேவைகளுக்கும் சமுதாயத்தின் தேவைகளுக்குமான சாதனங்கள், கருவிகள், பொருள்கள், அனைத்தையும் படைக்கவும் பாதுகாக்கவும் வகுக்கவுமான பணிகளில் ஈடுபட்டுள்ள மனிதர்களின் பால் உள்ளகடமைகள் முதலியனவும் அரசு அமைச்சு படை குடி, மற்றும் சமுதாயத்தின் மேல் கட்டுமானங்கள் அனைத்துத் துறைகளிலும் தொடர்புகள் சம்பந்தப்பட்ட தனிமனிதர்கள் மனிதக் குழுக்கள், மனிதக் கூட்டங்கள் ஆகியோர்களுக்கிடையிலான உறவுகளின் பால் உள்ள கடமைகள் முதலியன அனைத்தும் அடங்குவதாகும்.வேறுவார்த்தைகளில் சொல்வதானால் தனி மனிதர்கள் ஆனாயினும் பெண்ணாயினும் முறையே அவருடைய மனைவியின்பால்,கணவன்பால், குழந்தைகளின்பால், பெற்றோர்.பால்,உடன் பிறந்தோர் பால், உற்றார், உறவினர்களின் பால், குடும்பத்தின் பால், குலத்தின் பால், தெருவின்பால், ஊரின் பால், நாட்டின்பால், தேசத்தின்பால், உலகின்பால், மனித சமுதாயத்தின் பால், பிரபஞ்சத்தின் பால், இதர ஜீவராசிகள் பால் உள்ள கடமைகள் ஒவ்வொரு மனிதனும் ஆணாயினும், பெண்ணாயினும் சமுதாயத்தில் அவர்கள் வகிக்கும் நிலையடிப்படையிலான கடமைகள் மாணவர்கள், கிரகஸ்தன், வானப்பிரஸ்தன், ஆசிரியன், அரசன், அரசக்