பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுப்பாட்டுத்தனத்தில் பாரதி அ. சீனிவாசன் பாரதியின் கவிதைத் தொகுப்புகளிலே கண்ணன் பாட்டும். பாஞ்சாலி சபதமும் தனிச் சிறப்பு மிக்க கவிதைகளாகும் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். கண்ணன் பாட்டிற்கு முகவுரை எழுதிய நெல்லையப்ப பிள்ளையவர்கள் பாரதியாருக்கு கண்ணபிரான் மீதுள்ள அதி தீவிர பக்தியின் காரணமாக இந்நூலில் உள்ள பாடல்கள் வெளியாயின. இவை தமிழ் மக்களுக்கு ஒரு நல்விருந்தாகும் என்று குறிப்பிட்டுள்ளார். 'பாரத நாட்டின் குல தெய்வமாகி விட்ட கண்ணனுக்கு பாமாலை குட்டாத கவிகள் அருமை. தன்னை நெடு நாட்களாக மறந்திருந்த பாரத நாடு திடீர் என விழித்துக் கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய முரி, கீதா சாஸ்திரத்தைக் கூறி பார்த்தனுடைய ரதத்தை வெற்றி பெற முட்டிய கண்ணபிரானுடைய உருவமே. இந்த உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது' என்று வா.வே. சுப்பிரமணிய அய்யர் குறிப்பிடுகிறார். பாரதியின் பாஞ்சாலி சபதம் ஒரு தனிப்பெரும் காவியம். மகா பாரதக் காதயின் ஒரு முக்கிய திருப்பத்தைக் குறிக்கும். ஒரு முக்கியமான நிகழ்ச்சியை வைத்து அக்காவியம் எழுதப்பட்டது. எனினும் பாஞ்சாலியின் வடிவத்தில் பாரதி பாரத தேவியையே கண்டார். பாண்டவர்கள் அடிமைப்பட்டதை பாரத தேசம், அடிமைப் பட்டதாகவே பாரதி காண்கிறார். பாண்டவர்களும் பாஞ்சாலியும் சபதம் செய்வதை பாரத நாட்டின் விடுதலைக்காக பாரத மக்கள் சபத மேற்பதாகவே பாரதியின் கண் முன்னே காட்சியாக வருகிறது. வீட்டுமனும் துரோணனும் கர்ணனும் மிதுரனும் வேறு பல பெரியோர்களும் மன்னர்களும் இருந்த திருதராட்டிரன் சபைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலியை அவள் நீதி கேட்டு வாதாடியதை பெண்ணுரிமை கேட்டு வாதாடும் புதுமைப் பெண்ணாகவே பாரதி கண்டார். பாஞ்சாலி சபதம் ஒரு மகத்தான தலைசிறந்த ஆன்மீகக் கருத்துகளும், அரசியல் கருத்துகளும் சமுதாயக் கருத்துகளும், பெண்ணுரிமைக் கருத்துகளும் நிறைந்த ஒரு அற்புதமான படைப்பாகும். பாரதியின் பல வகைப் பரிமாணங்களையும் மேலும் மேலும் அதிகமாக நாம் கண்டறிய முயல்வதன் மூலம் பாரத நாட்டின் பண்பாட்டுத் தளத்தின் விரிவையும் கனத்தையும், பரப்பையும், உயர்வையும் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் சாத்தியமாகிறது. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 1. பாரதியின் பண்பாட்டுத்தளத்தின் அடிப்படை இந்தியப் பண்பாட்டுத் தளமே பாரதியின் பண்பாட்டுத் தளமாகும். இந்தியப் பண்பாட்டுத் தளத்தின் அடிப்படையாக "தர்மம்' என்னும் சொல் வழங்கப் படுகிறது. இது இந்து தர்மம், இந்திய தர்மம், பாரத தர்மம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. இந்து தர்மம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை வழிமுறையையும் கடமையையும் கொண்டதாகும். தர்மம் என்பதற்கு சமமான ஒரு சொல் இதர உலக மொழிகளிலே இல்லை. இந்திய மொழிகள் அனைத்திலும் தர்மம் என்றே வழங்கப்படுகிறது. தமிழில் தர்மம் என்றும் அறம் என்றும் வழங்கப் படுகிறது. வள்ளுவப் பெருமானின் முப்பாலில் முதல் பால் அறத்துப் பாலாகும். இந்திய சாத்திரங்களில் தர்மம் என்னும் சொல் மிகவும் பரந்த மிகவும் விரிவான பொருளில் கையாளப்படுகிறது. இந்து என்னும் சொல் இன்று பொதுவாக இந்து சமயம் அல்லது மதம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. அந்தப் பொருள் இன்று தற்காலத்திய நடைமுறையில் கையாளப்பட்டு வருகிறது. இது சரியானதல்ல. அன்னிய ஆட்சியின் விபரீத விளைவுகளில் இதுவும் ஒன்றாகும். இந்து தர்மம் என்பது பண்டைய கால பாரத தேசத்தில் சநாதன தர்மம் என அறியப் பட்டிருக்கிறது. நிலைநிறுத்தப் பட்ட உறுதிப் படுத்தப்பட்ட மனிதக் கடமைகளை வலியுறுத்திக் கூறுவதையே சநாதன தர்மம் என்று கருதிப படடது. இந்து தர்மத்தைப் பொதுவாக ஏற்றுக் கொண்டு பல மதங்கள், சமயங்கள், வழிபாடுகள், வழிபாட்டு தெய்வங்கள், பாரத மக்களிடையே நிலவி வருகின்றன. சிவ வழிபாடு, வைணவ வழிபாடு, சக்தி வழிபாடு, கணபதி வழிபாடு, அக்கினி வழிபாடு, முருக வழிபாடு, சிறு தெய்வ வழிபாடுகள் முதலியன. இவ்வாறு சில வகை மதங்கள், அல்லது சமயங்கள் இந்திய மக்களிடையில் பழக்கத்தில் உள்ளன. அத்துடன் புத்தம், சமணம் ஆகியவையும் தொடக்கத்தில் சமயச் சடங்குகள், வழிபாடுகள், தத்துவ ஞானக் கருத்துக்கள் முதலியவற்றில் முரண்பட்டிருந்தாலும் அவையும் இப்போது இந்து தர்ம பொது நீரோட்டத்தில் இணைந்து விட்டன. பின்னர் சீக்கியமும் சேர்ந்து விட்டது. பாரதி தனது கவிதைகளில் இந்தி இஸ்லாமியத்தையும் இந்தியக் கிறிஸ்துவத்தையும் சேர்த்து விட்டார். அல்லாவும். யாஹோவாவும் பாரதி மூலம் இந்திய கடவுளர்களின் வரிசையில் சேர்ந்து விட்டனர். இன்னும் இந்திய தத்துவ ஞானத்தில் நாத்திகமும் ஒரு பகுதியேயாகும். வழிபாட்டு முறைகளில் வேறு பட்டிருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே. அதை இந்துத்வம்,