பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி-அசீனிவாசன் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்" என்றும், தாம் தந்த வாக்குகளையும் தாம் தந்த வரிப் பொருளையும் கொண்டே ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களையும் அவர்கள் நடத்தும் அரசியலையும், 'அஞ்சு தரும் பேயென்றெண்ணி நெஞ்சமயர் வார்" என்றும், இன்னும் "கண்ணில்லாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் போய் மாட்டிக் கொள்வார்" என்றும் கூறுகிறார். போகின்ற பாரதத்தைச் சபித்து போ போ என்றும் வருகின்ற பாரதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று வாவா என்றும் பாடுகிறார்.நடிப்புச் சுதேசிகளைப் பற்றி உளம் நொந்து பாடுகிறார். நண்ணிய பெருங்கலைகள், பத்து நாலாயிரம் கோடி நயந்து நிற்கும் இந்த பாரத புண்ணிய பூமியில் இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வதைக் குறிப்பிட்டுவேதனை மிகுந்து பாரதிபாடுகிறார். இங்கு பாரதி பாரத நாட்டின் பத்து நாலாயிரம் கோடி நயந்து நிற்கும் பெருங்கலைகளைக் குறிப்பிட்டு. நமது பண்பாட்டுத் தளத்தில் காலூன்றி நின்று பாடுவதைக் காண்கிறோம். பாரதி பாடாத வேண்டாத தெய்வங்களில்லை. அதிலும் சாதாரண மக்கள் வழிபடும் சிறுதெய்வங்கள் அனைத்தையும் பாடுகிறார். சக்தியை, காளியை, மாரியை, மிகவும் உருக்கத்துடனும் உள்ளத்தின் ஈடுபாட்டுடனும் பாடியிருக்கிறார். மாரியை முத்து மாரியாகவும் தேச முத்து மாரியாகவும் வரித்துப் பாடியுள்ளார். சாதாரண மக்களை நல்வழிப்படுத்த முத்து மாரியை வேண்டுகிறார். இவையெல்லாம் பாரதியின் புது நெறியின் பகுதிகளாகும். "கலகம் செய்யும் அரக்கர் பலர் கருத்தினுள்ளே புகுந்து விட்டார். பல கற்றும் பல கேட்டும் பயன் ஒன்றுமில்லை. நிலையெங்கும் காணவில்லை. நின்பாதம் சரண்புகுந்தோம், துணிவெளுக்கமண் உண்டு,தோல் வெளுக்கச் சாம்பல் உண்டு, மணி வெளுக்கச் சாணையுண்டு. மனம் வெளுக்க வழியில்லை, அடைக்கலம் இங்குனைப் புகுந்தோம். எங்கள் முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரி' என்று பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமான பேதமையைப் போக்குமாறு முத்து மாரியை வேண்டுகிறார். கேடுகளை நீக்கும் படி கேட்டவரம் தரும்படி, கோடி நலன் செய்யும் படி குறைகளையெல்லாம் தீர்க்கும் படி, தேச முத்து மாரியை வேண்டுகிறார் துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம். இன்பமே வேண்டி நிற்போம். யாவும் அவள் திருவாள் என்று அந்த தேச முத்து மாளியை வேண்டுகிறார். - பொருள் செல்வங்களை தங்களுக்குமட்டும் வைத்துக்கொள்வதற்கு சில முயற்சிப்பதைப் போல அறிவுச் செல்வத்தையும் தங்களுக்கு மட்டும் வைத்துக் கொள்வதற்கான முயற்சியை பாரதி ஏற்கவில்லை. எல்லா வற்றையும் ஒன்றிணைப்பதற்கே, செல்வங்கள் அனைத்தையும் அவை பொருள் செல்வமானாலும் சரி, அறிவுச் செல்வங்களானாலும் சரி. இதர செல்வங்கள்.ஆனாலும் சரி அவை அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக்குவதற்கு பாரதி நமது பண்பாட்டு வழியின் தொடர்ச்சியைக் கொண்டு வந்துள்ளதைக் காண்கிறோம். "தேடிச்சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பம் மிக உழன்று - பிறர் வாடப்பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் புரவம் எய்தி-கொடுங் கூற்றுக் கிரையெனெப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல் - நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்று பாரதி தனது தெய்வத்தைக்கேட்கிறார்.இந்தப் பாடலில் பாரதியின் முழுவாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருக்கிறது.உலகில் பிறந்து மறுபடியும் எத்தனையோ ஜீவராசிகளைப் போல சில நாள் ஆடி, ஒடி காலம் கழித்து பூச்சிகளைப் போல மடிவதை எத்தனை வலுவுடன் பாரதி நிராகரித்துள்ளார் என்பதை இந்தப் பாடல் வரிகளில் காணலாம். பின்னர் பாரதி என்ன வேண்டுகிறார்? நாட்டின் நலனுக்காக, வளர்ச்சிக்காக, மேம்பாட்டிற்காக பல வேண்டுதல்களையும் கேட்கிறார். கடைசியில் முடிவாக, "பல பையச்சொல்லுவதிங்கென்னே - முன்னைப் பார்த்தன் கண்ணன் இவர் நேரா- என்னை உய்யக் கொண்டருள வேண்டும்-அடி உன்னைக் கோடி முறை தொழுதேன்-இனி வையத்தலைமை எனக் கருள் வாய் - அன்னை வாழி நின்னதருள் வாழி'