பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வறுமையாகும். இத்தகைய பன்முக வறுமைகளின் கொடுமைகளைப் போக்க நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தனி முயற்சியும், அனைவரின் கூட்டு முயற்சியும் தேவை. கூடித் தொழில் செய் என்று பாரதி கூறுகிறார். நாம் பல நேரங்களிலும் தோற்றத்திலும் வேடத்திலுமான போலியான சமத்துவத்தின் பேரால் வறுமையையும் அறியாமையையும் பங்கு போட முயற்சிக்கிறோம். அதனால் வீணான முரண்பாடுகளும், மோதல்களும், கலவரங்களும், கால விரயங்களும் கஷ்ட நஷ்டங்களும் தான் ஏற்படுகின்றன. நமது எண்ணங்களையும் கருத்துகளையும் கொள்கை நிலைகளையும் ஏலம் போட முடியாது. கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்து நிற்கும் இந்தப் புண்ணிய நாட்டினில் நாம் பொறியற்ற விலங்குகள் போல் ஏன் வாழ வேண்டும் என்று பாரதி மனம் நொந்து பாடுகிறார். பண்டை நாட்களில் நன்கு பல கலைகள் வளர்த்தோம், கல்வி வளர்த்தோம். கலை வாணிக்குப் பூசை செய்தோம் என்று பழம் பெருமை பேசி பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஆனால் வெறும் பழம் பெருமை பேசி மட்டும் பலனில்லை. புத்தம் புதுக் கலைகள் பலவும் படைக்க வேண்டும். உலகெங்கும் உள்ள சிறந்த கலைகள் அனைத்தையும் இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். உலக நிலைக்கு நாம் உயர வேண்டும். இன்னும் உலகிற்கே வழிகாட்டும் அளவிற்கு நாம் உயரவேண்டும்.இடைக்காலத்தில் ஏற்பட்டஇடை வெளியை நிரப்பிச் சீரமைக்க வேண்டும். எனவே பாரதி மீண்டும் மீண்டும் தொழில் செய், தொழில் செய் என்று கூறுகிறார். ஒருசொல்லைப் பல தடவை அதன் பொருளைக் கருதாமல் திரும்பத் திரும்பக் கூறினால், அதுவே வெற்றுரையான மந்திரம்போல் ஆகிவிடும். அவை பொருளற்றவாய்ச் சொல்லாகி விடுகின்றன. ஆனால் சீரிய கருத்துகளையும் அறிவுக் கதிர்களையும் இடைவிடாமல் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். அவைகளை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். கருத்துகள் மக்கள் மனதில் வலுவாகப் பதிந்து வேரூன்றி வலுப்பெற்று விடுமானால் அதுவே ஒரு பெளதீக சக்தியாக வல்லமை மிக்க பஞ்சபூத சக்திகளைப் போன்று மாறி வளர்ச்சி பெற்று அம்மனிதனை கூட்டான மனித சக்தியை அசகாய சூரத்தனமான செய்கைகளில் ஆக்கத் தொழில்களில் ஈடுபடச் செய்ய வைக்கும். அதனால்தான்நமது நாட்டில் மக்களை மேம்படுத்துவதற்காக சோர்வை நீக்கி செயலில் ஈடுபடச் செய்ய வைக்கும். அதனால்தான்நமது நாட்டில் மக்களை மேம்படுத்துவதற்காக சோர்வை நீக்கி செயலில் ஈடுபடச் செய்வதற்காக இராமாயணம், மகாபாரதம் மற்றும் பல சாத்திரங்கள், கலைகள் முதலியவற்றை நமது மக்களிடம் இடைவிடாமல் திரும்பத் திரும்பப் பல்வேறு முறைகளிலும் வடிவங்களிலும் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இராமாயணம், மகாபாரதம் போன்ற சாகாவரம் பெற்ற 8.1 இதிகாசங்களிலிருந்து தர்மமும் நீதி நெறியும் மட்டுமல்லாமல் வீரர்களின் முன்னுதாரணங்களையும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொள்கிறோம் இராமனும், இலக்குவனும், அனுமனும், கண்ணனும், விஜயனும் வீமனும் நமக்கு ஆதர்சமூட்டும் கள வீரர்களாகும். வழிபடும் செயல் வீரர்களாகும். "வித்தைக் கிறைவா, கன நாதா! மேன்மைத் தொழிலில் என்னைப் பணிப் பாயாக!" என்று கணபதியை வேண்டுகிறார். "பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவில் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய் குவையே' என்று பாரதி கனநாதனை வணங்கி வேண்டுகிறார். 'வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு வாழும் மாந்தர்க்கு குல தெய்வமாவாள்' என்றும், "வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர், வித்தை யோர்ந்திடும் சிற்பியர், தச்சர்" என்றும், "மிஞ்ச நற்பொருள் வாணிபம் செய்வோர், வீர மன்னர், பின் வேதியர் யாரும் தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம்' என்றும் பாரதி குறிப்பிடுகிறார். இந்தப் பாடல்களில் சிறந்த பொருளியல் கருத்துக்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம். “கை வருந்தி உழைப்பவர் தெய்வம், கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்" என்று உழைப்பையும் அறிவையும் தெய்வ நிலைக்கு பாரதி உயர்த்துகிறார். "ஓங்கி கல்வி உழைப்பை மறந்தீர், மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ?' என்று கல்வியையும் உழைப்பையும் மறந்தவரை மகாகவி கண்டனம் செய்து பாடுகிறார். "செல்வம் எட்டும் எய்தி நின்றால் செம்மை யேறி வாழ்வேன்' என்றும், "இல்லை யென்னும் கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்" என்றும் பாரதி தனது கொள்கை நிலையை உறுதிப்படுத்திப் பேசுகிறார். "ஆடுகளும், மாடுகளும் அழகுடைய பரிகளும் வீடுகளும் நெடு நிலமும், விரை வினிலேதருவாய்' என்று பாரதியார் ரீதேவியை வேண்டுகிறார். "தருவாய் தொழிலும் பயனும்" என்று முருகனை வேண்டுகிறார்."நீறு படக் கொடும்பாவும், பிணி, பசி, யாவையும் இங்கு நீக்கி அடியாரைக் காக்குமாறு வேலவனை வேண்டுகிறார். "திருவைப்பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து மகிழ்வுற்றிருப்போம்"