பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் என்று கூறுகிறார். "அறிவுதான் பரம ஞானமாகும்" என்றும், "நீதியாக அரசு செய்வர். நிதிகள் பல கோடி துப்பர், நீண்டகாலம் வாழ்வர் தரை மீது" என்றும் அரசியல் நெறிக்கு இலக்கணம் கூறியும் பாரதி பேசுகிறார். "தொழில் பண்ணப் பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணை புரிதல் வேண்டும்" என்று தொடங்கி, "கல்லை வயிர மணி யாக்கல் - செம்பைக் கட்டித் தங்கம் எனச் செய்தல் - வெறும் புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப் போத்தை சிங்க வேறாக்கல் - மண்ணை வெல்லத் திணிப்பு வரச் செய்தல் - என விந்தை தோன்றிட விந்நாட்டை - நான் தொல்லை தீர்ந்துயர்வு கல்வி - வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை" "கூடும் திரவியத்தின் குவைகள் - திறல் கொள்ளும் கோடி வகைத் தொழில்கள் - இவை நாடும் படிக்கு வினை செய்து-இந்த நாட்டோர் கீர்த்தியெங்கும் ஓங்கக் கலி சாடும் திறன் எனக்குத் தருவாய்-அடி தாயே உனக்கரிய துண்டோ-மதி மூடும் பொய்மை இருள் எல்லாம் - என்னை முற்றும் விட்ட கல வேண்டும்" என்று காளியை வரம் கேட்பதாகச் சொல்லித் தொழில்கள் மூலம், தொழில் உழைப்பின் மூலம் மந்திர சக்தி போன்று நாட்டையே மாற்றியமைக்கக் கவிஞன் பாணியில் கூறுகிறார் மகாகவி பாரதி. வஞ்சனை, சூது, பகை, இன்றி வையத்து மாந்தர் எல்லாம் வாழ வேண்டும் என்பது பாரதியின் அரசியல் மற்றும் சமுதாய நெறியாகும். "நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப்பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே! Տ5 கூட்டி மானிட சாதியை ஒன்றெனக் கொண்டு வைய முழுதும் பயனுற பாட்டிலே அறம் காட்ட வேண்டும்" என்றும் "நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நாநிலத்தவர் மேநிலை எய்தவும் பாட்டிலும் பண்ணிலும் இசைத்து இன்பம் விளைதல் வேண்டும்" என்றும் பாரதி பொது நெறி வகுத்துப் பேசுகிறார். "வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை மேன்மையுறச் செய்ய வேண்டும்" என்று பாரதி விரும்பினார். மன உறுதியும் சக்தியும் பெற்று நல்ல தொழில் செய்யும் உறுதிப்பாடு வேண்டும் என்று கூறுகிறார். "சக்தி செய்யும் தொழில் களைப் எண்ணு. நிதம் சக்தியுள்ள தொழில் பல பண்ணு' என்று சக்தி புகழ் பாடுகிறார். பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள் என்னும் தத்துவத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார். "பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள்" என்பது கண்ணனுடைய கீதா வாக்கியம். அது நிஷ்காமிய கர்மம் என்பதாகும். பயனை எதிர்பார்க்காமல் உன் கடமைகளை உன் பணிகளை உன் தொழில்களை சோர்வு இல்லாமல் செய்து கொண்டேயிருக்க வேண்டும். உழுதுண்டு வாழும் கிராம மக்களிடையில் "அழுது கொண்டேயிருந்தாலும் உழுது கொண்டேயிருக்க வேண்டும்" என்று ஒரு பழமொழி உண்டு. அப்போது தான் உலகம் வாழும். இந்த சொற்களின் பொருள் தொழில் மட்டும். அதாவது வேலைகளை மட்டும் செய்து கொண்டேயிருக்க வேண்டும். அதன் பலன்கள் தேவையல்ல என்பதல்ல. வெட்டி வேலை என்று பொருளல்ல. பலன்களை அவ்வேலைகளின் தொழில்களின் முழுமையான பலன்களை ஆண்டவனுடைய செயலுக்கு விட்டு விடவேண்டும் என்பதாகும். கடமைகளை நிறைவேற்றுவதில், தொழில்களைச் செய்வதில் மனிதனுடைய முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சொற்கள் வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கின்றன. தொழில் செய்யப்படாவிட்டால் உலகம் அழிந்து விடும். "எவரும் ஒரு கணப் பொழுதுதேனும் செய்கையின்றி இருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாக இடைவிடாமல் தொழில் செய்விக்கின்றன" என்பது கீதா வாக்கியமாகும்.