பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட் டுத் தளத்தில் பாரதி | சீனிவாசன் கூறியுள்ளார்கள்.அரசு அமைச்சு அங்கம், நிர்வாகம், குடிமக்கள் பற்றிய பல சீரிய கருத்துகளை வகுத்துள்ளார்கள். சபை கூடிக் கலந்து பேசி முடிவுகளும் நீர்மானங்களும் எடுப்பது என்பது மன்னாட்சி காலத்திலும் கூட நமது நாட்டில் பல மரபுகளும் நெறிமுறைகளும் இருந்திருக்கின்றன. அதே சமயத்தில் மறுபக்கத்தில் கொடுங்கோன்மைகளும் போர்களும் கொடுமைகளும் படுகொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. பாஞ்சாலி சபத்தில் துரியோதனன் சபையைப் பற்றிக் குறிப்பிடும் போது அறமறிந்த வீட்டுமன் மெய்ந்நெறி விதுரன், பொய்ந்நெறித்தம்பியர் புலை நடைச்சகுனி முதலியோர் இருந்ததைப் பற்றி பாரதி குறிப்பிடுகிறார். மதக் கொலைகளும் அரசர் தம் கூத்துகளும் மூத்தவர் பொய் நடையும் நிலவிய கதைகளைப் பற்றியும் கவிஞர் குறிப்பிடுகிறார். அரசியலில் இன்றைய நாள் வரையிலும் அறமில்லாத மறவர். குற்றமே தமது மகுடமாகக் கொண்டோர், மற்றைய மனிதரை அடிமைப்படுத்தலே முற்றிய அறிவின் மறையென்றெண்ணுவோர். பற்றையரசர் பழி படுபடையுடன் சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார். இத்தகைய பழிபடு அரசியலை மாற்றி புவி மிசைத் தருமமே அரசியலதனிலும் பிறஇயல் அனைத்திலும் வெற்றி தரும் என வேதம் சொன்னதை பாரதநாடு முற்றும் பேண முற்பட்டு உலகிற்குப் புதுநெறி காட்டப் போகிறது என்று கூறுகிறார். இது பாரதி கூறும் அரசியல் நெறியின் அடிப்படையாகும். அரசியல் கிளர்ச்சி முறை பற்றி சுடுதலும் குளிரும் உயிருக்கில்லை. சோர்வுகள் வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை எடுமினோ அறப்போரினை என்று காந்தி சொன்னதை அங்கீகரித்து பாரதி குறிப்பிடுகிறார். பாரத சமுதாயம் (அன்று முப்பது கோடி (இன்று நூறு கோடி) ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடமை, ஒப்பில்லாத சமுதாயம். உலகத்திற்கொரு புதுமையாகத் திகழ வேண்டும் என்பது பாரதியின் அரசியல் மற்றும் சமுதாய லட்சியமாக இருந்திருக்கிறது. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம். எல்லோரும் ஓர் நிறை. எல்லோரும் இந்திய மக்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர், எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்பதே பாரதியின் லட்சியக் கனவு. அதுவே கவிஞரின் அரசியல் புது நெறியுமாகும். "நாட்டு மாந்தர் எல்லாம் - தம் போல் நரர்களென்று கருதார் ஆட்டு மந்தையாம் என்ற வகை அரசர் எண்ணி விட்டார் காட்டும் உண்மை நூல்கள்- பலதாம் காட்டினார்களேனும் நாட்டு ராஜ நீதி - மனிதர் நன்கு செய்யவில்லை" என்று தருமன் சூதாட்டத்தில் நாட்டைப் பணயமாக வைத்து ஆடியதைக் கண்டித்துக் கூறுகிறார். "பேயரசு செய்தால் பினம்தின்னும் சாத்திரங்கள்" என்னும் கருத்தாழம் மிக்க ஒரு கவிதை வரியைக் கூறியிருப்பது பாரதியின் தனிச் சிறப்பாகும். 'நல்லறம் பாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய் - அவர் அல்லவர்களாயின் அவரை விழுங்கி ஆனந்தக் கூத்திடுவாள்' என்று பாரதி கூறுகிறார்."அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்பது இளங்கோவடிகளின் வாக்காகும். "நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்" என்பது அப்பரடிகள் வாக்காகும். அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பது கம்பனது அரச நீதிக் கருத்தாகும். இது நமது நாட்டின் பண்பாட்டு மரபு வழி அரசியல் கருத்தும் அனுபவமுமாகும். பாரதியின் இந்த வார்த்தைகள் நமது நாட்டு மக்களின் அரசியல் வாழ்வில் நமக்கு வழிகாட்டிச் செல்லும் பாரம்பரியமான கருத்துகளாகும். எல்லாவற்றிற்கும் மேலாக பாரதி காட்டும் அரசியல் மற்றும் பொது நெறி "தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை மருமத்தை நம்மாலே யுலகங்கற்கும் வழி தேடி விதியிந்த செய்கை செய்தான் கருமத்தை மேன்மேலும் காண்போம்-இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் தருமத்தையப் போது வெல்லக் காண்போம் தனுவுண்டு காண்டிவமதன் பேர் என்றான்." என்று விஜயன் கூறிய பாரதியின் கவிதை வரிகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் அமரத்வம் மிக்க கவிதை வரிகளாகும். உலகம் உள்ளளவும் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளளவும் பாரதியின் இந்தக் கவிதை வரிகள் கம்பீர நாதத்துடன் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.