பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் இந்தியத்வம், பாரதத்துவம் என்று கூறுகிறோம். இதைக் குறுகிய கண்ணோட்டத்தில் காண்பது அறியாமையேயாகும். தர்மம் என்னும் சொல்லிற்கு வெறும் மதம் அல்லது சமயம் என்பது மட்டும் பொருளல்ல. (இந்து) தர்மம் என்பது ஒரு பொதுவான கருத்து வடிவமாகும். மதம், சமயம், மரபு, பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் வாழ்க்கை முறை. நடைமுறை செயல்பாடுகள், நீதி, நெறிமுறை, குணச்சிறப்புகள், குணத்தன்மைகள், சமுதாய ஒழுக்க நெறிமுறைகள் இன்னும் பலதரப்பட்ட பல்வேறுப்பட்ட கடமைகள் முதலிய பலவும் தர்மம் என்னும் சொல்லில் அடங்கும். தர்மம் என்னும் சொல் கடமை என்னும் சொல்லுடன் விரிவுபடும். எனவே இந்து தர்மம் என்பது வாழ்க்கை நெறி முறையாக விரிவுபடுகிறது. தர்மம் என்பதையே அறம் என்னும் சொல்லில் வள்ளுவர் பெருமானும், கம்பநாடரும் தங்களது பேரிலக்கியங்களில் விளக்குகிறார்கள். வள்ளுவர் தனது அறத்துப் பாலில் மனிதனுடைய கடமைகளை இல்லறம், துறவறம் என்னும் தலைப்புகளில் விளக்கிக் கூறுகிறார். கம்பன் அறம் வெல்லும் என்னும் மகத்தான தத்துவத்தையும் லட்சிய நோக்கையும் அதை நிறைவேற்ற வேண்டிய கடமையின் கடமையாக தனது மகாகாவியத்தில் நெடுகிலும் குறிப்பிட்டுக் கூறுகிறார். பாரதி தனது விநாயகர் நான்மணி மாலைப் பாடல்களில் கடமை பற்றிய தனது கருத்துக்களை மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். "கடமையாவன, தன்னைக் கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய் நாராயணனாய், நதிச் சடை முடியனாய் பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி அல்லா, யெஹோவா எனத் தொழுதின்புறும் தேவரும் தானாய், திருமகள், பாரதி உமையெனும் தேவியருகந்த வான் பொருளாய் உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல், இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும் கடமையெனப்படும் பயணிதில் நான்காம், அறம் பொருள் இன்பம் வீ டெனும் முறையே தன்னையாளும் சமர்த்தெனக் கருள்வாய்." என்று குறிப்பிடுகிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்பதையே இந்து தர்மம் நான்கு புருஷார்த்தங்களாக தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று வகைப்படுத்திக் கூறுகிறது. இந்து தர்மத்தின் படி இந்த நான்கு புருஷார்த்தங்களே மனித வாழ்க்கையின் அடிப்படை என்பதை நமது சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நான்கு புருஷார்த்தங்களையும் நாம் நன்கு புரிந்து கொண்டு அவைகளை சீராகச் செயல்படுத்தினால் வாழ்க்கை நலன்கள் அனைத்தும் நிறைவு பெறும். நமது நாட்டில் சிலர், மேலை நாடுகள் பொருளாயத வாழ்க்கையை அதாவது லெளகீக வாழ்க்கையை அதிகமாக வலியுறுத்துகின்றன என்றும், அதற்கு மாறாக பாரத நாடு ஆன்மீக வாழ்க்கைக்கே அதிக அழுத்தம் கொடுக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது முழு உண்மையல்ல. மேலை நாடுகள் பொருளாயத வாழ்க்கைக்கும் குறுகிய வட்டத்திலான வாழ்க்கை இன்பங்களுக்கும் அதிக முக்கியத்வம் கொடுக்கின்றன என்பது உண்மை தான். பொருளாயத வாழ்க்கையும் வாழ்க்கை இன்பங்களும் அறவழியிலும், அன்பு வழியிலும் அமைய வேண்டும் என்பதை மேலை நாட்டு சாத்திரங்களும் இலக்கியங்களும் வலியுறுத்திக் கூறவில்லை. அதனால் போட்டியும், போர்களும், பெருநாசங்களும் விளைந்தன. அந்த நிலை உலகில் மாற வேண்டும். அதற்கு பாரதம் வழி காட்ட வேண்டும். பாரதநாடு ஆன்மீக வாழ்க்கைக்கே அதிக அழுத்தம் கொடுக்கிறது என்று கூறுபவர்கள் ஒன்றை மறந்து விட்டனர். நமது புருஷார்த்தங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கிற்கும் நமது சாத்திரங்களும் இலக்கியங்களும் சமமான முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விடுவதால் பாரதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நமது ஆன்மீகம் மனிதநேயத்தின் அடிப்படையில், இன்னும் இயற்கை இதர ஜீவ ராசிகளின் பாலான நேயத்தையும் அவைகளுடன் இணைந்த வாழ்க்கையையும் அடிப்படையாகக்கொண்டது. நமது ஆன்மீகம் அறத்தின் பாற்பட்டது. அதனால் தான் நமது வாழ்க்கை அனைத்திலும் அறன் வலியுறுத்தப் படுகிறது. அது முதன்மையான இடத்தைப் பெறுகிறது. பொருள் சேர்த்தல் இல்லறத்திற்கு முதலாவது கடமையாகும். விட்டிற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் பொருள் சேர்த்தல் முக்கியத்துவம் பெறுகிறது. நமது சாத்திரங்கள் பொருள் சேர்த்தலைப் பற்றி மிக அதிகமாகவே வலியுறுத்தியுள்ளன. அவை அறவழியில் அமைய வேண்டும் என்பதையும் நமது சாத்திரங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. இன்பம் என்பது வாழ்க்கை இன்பங்கள் அனைத்தையும் பற்றிக்