பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் என்றெல்லாம் பாரதியின் கவிதை வரிகள் குறித்துக் காட்டுகின்றன. தமிழின் பழம் பெருமையும். இந்நாளில் ஏற்பட்டிருக்கும் சிறுமையும் பற்றிப் பாடியுள்ள அப்பாடல்களில் பாரதி புதிய நெறிகளை, புதிய கடமைகளை வற்புறுத்திக் கூறுகிறார். மக்களின் அறியாமை, கல்லாமை, தீண்டாமை, மூட நம்பிக்கைகள், மூட பழக்க வழக்கங்கள், பெண்ணடிமை முதலிய கொடுமைகளையும் பரிதாப நிலைமைகளையும் கண்டு மனம் புழுங்கி புதிய நெறிகளை நமக்குக்காட்டிபுதிய மார்க்கத்திற்கு வழிகாட்டுகிறார். இவ்வாறு பாரதியின் சுதந்திரம் விடுதலை என்னும் கருத்து வடிவங்கள் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டதாகும். அதையே அவர் முழுமையான சுதந்திரம் என்று கருதினார். கூறினார், பாடினார். அதையே பரிபூரண சுதந்திரம் என்று தேசீய விடுதலை இயக்கம் பின்னாளில் முன்வைத்தது. அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது என்பது அரசியல் விடுதலையின் முதல் கட்டம். இதை பாரதி எந்தவிதமான தயக்கத்திற்கும் ஊசலாட்டத்திற்கும் இடமில்லாமல் முன்பின் முரணில்லாமல் சுதந்திரம் என்னும் பிரச்சினையில் எந்தவிதமான விட்டுக் கொடுத்தலுக்கும் சமரசத்திற்கும் இடமில்லாமல் வற்புறுத்தி புரட்சிகர ஜனநாயக உணர்வு நிலையில் வலியுறுத்தித் தனது கவிதைகளைக் கருத்துடன் பாடியிருக்கிறார். பாரதி சுதந்திரம் ஜனநாயகம் பற்றி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூறிய அரசியல் கருத்துக்கள் பலவும் 1950 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நமது அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளின் பகுதியிலும் வழிகாட்டும் கோட்பாடுகள் பகுதியிலும் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம். இப்போது நம்மை நாமே ஆள்கிறோம். இரண்டாவதான மனித சுதந்திரம் மனித வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ள பொருளாதார வசதிகளும் வாய்ப்புகளுமாகும். உணவு,உடை, வீடு, கல்வி. சுகாதாரம், நலவாழ்வு வேலை, பொழுதுபோக்கு வசதிகள் (ஆடல், பாடல்), விளையாட்டு வசதிகள், நாகரிகமான மனித வாழ்க்கைக்கு அவசியமான அத்தனை வாய்ப்புகளும் வசதிகளும் ஏற்றத் தாழ்வுகளும் பாகுபாடுகளும் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதைப் பல இடங்களிலும் பல கட்டங்களிலும் பாரதி தனது கவிதைகளில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். மூன்றாவதாக, சமூகப் பாகுபாடுகள், கொடுமைகள், ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை, பெண்ணடிமை முதலிய கொடுமைகளைப் பாரதி மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார். சாதிக் கொடுமைகளும், சாதிப் பாகுபாடுகளும் வேறுபாடுகளும் நீங்க வேண்டும் என்பதை வலுவாக வலியுறுத்தித் } தெளிவான சொற்களில் கூறியுள்ளார். சாதியிரண்டொழிய வேறில்லை என்பது தமிழ்த் தாயின் சொற்கள். பாரதி சாதி மதங்களைப் பாரோம் என்றார். சாதி வேறுபாடுகளைக் கூறும் பொய்ச்சாத்திரங்களைப் பொசுக்கி விடுவோம் என்று கூறுகிறார். சாதி நூறு சொல்லுவாய் போ, போ என்று பாடுகிறார். சாதியில் இழிவு கொண்டமனிதர் என்பர் இந்தியாவில் இல்லை.அனைவரும் கல்வி, செல்வம் பெற்று சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்பது பாரதி வாக்கு. "சாதிப் பிரிவுகள் சொல்லி- அதில் தாழ்வென்றும் மேலேன்றும் கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்வார் நித்தமும் சண்டைகள் செய்வார்" "சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னிற் செழித்திடும் வையம், ஆதரவுற்றிங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம்மாண்புறச் செய்வோம்" என்றும் "அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்" என்றும் கூறுகிறார். கடைசியாக எதிர்கால சந்ததியினரிடம் "சாதிகள் இல்லையடிப் பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி. கல்வி-அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்" என்று பாப்பாப் பாட்டில் அனைவருக்குமான சம நீதியை, சமூக நீதியை வலியுறுத்திப் பாடியுள்ளதைப் பார்க்கிறோம். முழுமையான சமூக நீதியோடு கூடிய சமூக விடுதலையை பாரதி வற்புறுத்திப் பாடியுள்ளார். நான்காவதாக அறியாமையிலிருந்தும், கல்லாமையிலிருந்தும் விடுதலை பெற வேண்டும் என்பது பாரதி கவிதைகளின் கருத்துக்களின் உயிர் மூச்சாக இருந்தது. கல்வி, அறிவு, ஞானம், செல்வம் ஆகிய சொற்கள் பாரதி கவிதைகளின் 위나다 நாதமாகும். அறியாமையிலிருந்தும்