பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் "வானமுண்டு, மாரியுண்டு, ஞாயிறும், காற்றும், நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே" என்று பாரதி பாடுகிறார். "மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டுகள். மரங்கள், யாவும் என்வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவ தேவா!' என்று விநாயகரிடம் வேண்டுகிறார். 'காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்" என்று பாரதி ஜெய பேரிகை கொட்டுகிறார். "வானில் பறக்கின்ற புள் எல்லாம் நான் மண்ணில் திரியும் விலங்கெலாம் நான், கானில் வளரும் மரமெலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான்" "விண்ணில் எரிகின்ற மீன் எலாம் நான் வெட்ட வெளியின் விரி வெலாம் நான் மண்ணிற் கிடக்கும் புழுவெலாம் நான் வாரியில் உள்ள உயிரெல்லாம் நான்" என்று பாரதி பாடுகிறார். இதுவே பாரதியின் ஒருங்கிணைந்த தத்துவமாகும். கலியின் வீழ்ச்சியும் கிருதயுகத்தின் தோற்றமும் பாரதி ஒரு பிரம்ம ஞானி. ஜீவன் முக்தர். அவர் ஒரு கர்ம யோகியாக வாழ்ந்தார். கடவுள் கர்ம யோகிகளில் சிறந்தவர். அவன் ஜீவாத்மாவுக்கு இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான் என்று பாரதி குறிப்பிடுகிறார். பாரதி தனது சுயசரிதையில் "அறிவிலே தெளிவு. நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனியரசாணை பொழுதெலாம் நினது பேரருளின் H.I நெறியிலே நாட்டம் கரும யோகத்தில் நிலைத்திடல் என்றிவை யருளாய் குறி குணமேது மில்லதாய் அனைத்தாய்க் குலவிடும் தனிப் பொருளே!" என்று பாரதி பாடுகிறார். தன்னைக் கரும யோகத்தில் நிலைத்திட வேண்டுகிறார். பாரதி கண்ணனின் முழுமையான உலகப் பெருவடிவத்தையும் கர்மயோக வடிவத்திலேயே காண்கிறார். அவர் தனது காளி ஸ்தோத்திரத்தில், "கர்ம யோக மொன்றே - உலகில் காக்கும் என்னும் வேதம் தர்ம நீதி சிறிதும் - இங்கே தவறிடல் என்பது இன்றி மர்மமான பொருளாம்-நின்றன் மலரடிக் கண் நெஞ்சம் செம்மையுற்று நாளும் - சேர்ந்தே தேசு கூடவேண்டும்" என்று பாடுகிறார். பாரத நாட்டு மக்கள் கர்ம யோகத்தின் வழியில் கலியை வீழ்த்தி இந்தப் புண்ணியப் பூமியில் கிருதயுகத்தை நிறுவிடக் கூறுகிறார். விநாயகர் நான்மணிமாலையில் "வீழ்க கலியின் வலியெலாம். கிருத யுகம் தான் மேவுகவே" என்று கணபதியை வேண்டுகிறார். "மெய்க்குங்கிருத யுகத்தினையே கொணர்வேன்செய்வதியிஃதே" என்று வலியுறுத்துகிறார். "கிருதயுகத்தினைக்கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டனன் வெற்றி தரும் சுடர் விநாயகன் தாளியை வாழியே' என்று தான் கிருத யுகத்தினை நிறுத்திட விரதம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். "சத்திய யுகத்தை அகத்திருத்தித் திறத்தை நமக்கு அருளிச் செய்யும் உத்தமி" என்று நவராத்திரிப் பாட்டில் உஜ்ஜயினியை வேண்டுகிறார். "இடிப்பட்ட சுவர் போல கலி வீழ்ந்தான் கிருதயுகம் எழுக மாதோ'