பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் என்று கிருதயுகத்தை அறைகூவி அழைக்கிறார். "எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான். எல்லாரும் அமர நிலை யெய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்' என்னும் நம்பிக்கையுடன் பாரத சமுதாயத்தை வாழ்த்துகிறார். நமது பாரத புண்ணிய பூமி, அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேய ஆட்சியினர் விட்டுச் சென்ற நிர்வாக எந்திரத்தை வைத்துக் கொண்டு அன்னிய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற சமுதாய சேதங்களை சீரமைக்க கரடு முரடான பாதையில் முன் சென்று கொண்டிருக்கிறது. பாரதியின் வழியில் பாரத சமுதாயம் நிலை பெற இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியதிருக்கிறது. பாரதியின் பாரதத்வ வழி தொடவேண்டும். பாரதி பாடியுள்ள இசை வழி மரபுகள் பாரதி தனது கவிதைகளைப் பாடும்போது பாரத நாட்டின் எல்லாவித இசை வழி மரபுகளையும் பண்பாடுகளையும் இராகம், தாளம் மெட்டுகளையும் பின்பற்றிக் கையாண்டுள்ளார். கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, நொண்டிச்சிந்து, கிளிக்கண்ணி, காவடி சிந்து, பண்டாரப்பாட்டு, பள்ளுப்பாட்டு, அம்மானை, ஆனந்தக் களிப்பு. கும்மி, தாலாட்டு மற்றும் அவர் காலத்தில் வாழையடி வாழையாக நிலவி வந்த செம்மொழி இசை மரபுகள், நாட்டுப்புற மக்களின் இசை அமைப்பு முறைகளையும் பயன்படுத்தி எல்லா வகையான இசைரசங்களையும் கையாண்டு, வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல், வசன கவிதை முதலிய பலவகையான தமிழகக் கவிதை வடிவங்களையும் பயன்படுத்திப் பாடியுள்ளார். தமிழ் சமுதாயத்தின் அனைத்து பண்பாட்டு வடிவங்களின் கூட்டு உடன்பாட்டு நிலையில் பாரதி அனைத்தளாவிய தன்மை கொண்ட முழு வடிவத்திலான கவிக் குயிலாகத் திகழ்ந்துள்ளார். மகாகவி பாரதி தமிழ் மண்ணில் பிறந்தது நமது புண்ணிய பலனாகும். பாரதியை இன்னும் நாம் முழுமையாக அடையாளம் காணவும், அவருடைய கவியுள்ளத்தைக் காணவும் முயல வேண்டும். கடைசியாக பாரதி குடுகுடுப்பைப் பாட்டு வடிவத்தையும் விட்டு விடவில்லை. நல்ல காலம் வருகுது என்று எதிர்காலத்தைக் கட்டியங் கூறி அழைப்பவனல்லவா குடுகுடுப்பைக்காரன். அதை எப்படி பாரதி விட்டு விடுவார். புதிய கோணங்கியாக வேடம் தரித்து குடுகுடுப்பைக் காரனாக நம் முன்னே வந்து நின்று நல்ல காலம் வருது நல்ல காலம் வருது என்று குறி சொல்லி மிகவும் அபூர்வமான பல சிறந்த கருத்துக்களை முன்வைத்துப் பாடுகிறார். "குடு குடு, குடு குடு, குடு குடு, குடு குடு நல்ல காலம் வருகுது. நல்ல காலம் வருகுது சாதிகள் சேருது. சண்டைகள் தொலையுது சொல்லடி சொல்லடி சக்தி மகாகாளி வேத புரத்தாருக்கு நல்ல குறி சொல்லு தரித்திரம் போகுது செல்வம் வருகுது படிப்பு வளருது, பாவம் தொலையுது படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான் வேதபுரத்தில் வியாபரம் பெருகுது தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான் சாத்திரம் வளருது. சூத்திரம் தெரியுது எந்திரம் பெருகுது தந்திரம் வளருது மந்திரம் எல்லாம் வளருது வளருது' "குடு குடு, குடு குடு, குடு குடு, குடு குடு சாமி மார்க்கெல்லாம் தைர்யம் வளருது தொப்பை கருங்குது. சுறுசுறுப்பு விளையுது எட்டு லட்சுமியும் ஏறி வளருது, பயம் தொலையுது பாவம் தொலையுது சாத்திரம் வளருது சாதி குறையுது நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது பழய பயித்தியம் படீலென்று தெளியுது வீரம் வருகுது மேன்மை கிடைக்குது சொல்லடி சக்தி மலையாள பகவதி தருமம் பெருகுது தருமம் பெருகுது' என்று பாரதி புதிய கோணங்கி என்னும் தலைப்பில் ஒரு அருமையான