பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் நூல்களைப் பதிப்பித்து அப்பதிப்பகத்தின் நிர்வாகியாகப் பணியாற்றியும் வருகிறார். திரு. அ. சீனிவாசன் மகாராஜபுரம் சாத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர் ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்பு முடித்து இந்திய விமானப்படையில் தகவல் தொழில் நுட்பப் பயிற்சியும் பெற்றுள்ளார். அப்போது ஆங்கில மொழியில் தனிப் பயிற்சியும் பெற்றார். அத்துடன் சொந்த முயற்சியில் தமிழ் இலக்கியத்திலும் குறிப்பாக பாரதி நூல்கள், கம்பராமாயணம், நாலாயிரத்திவ்யப் பிரபந்தம். சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் ஆழப்படிப்பும் பயிற்சியும் பெற்றார். இவ்வாறு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல பயிற்சியும் அத்துடன் தெலுங்கு. மலையாளம், இந்தி ஆகிய மொழிகளும் அறிந்தவர். திரு.அ. சீனிவாசன் 1947ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை சுமார் 52 ஆண்டுகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில், அக்கட்சியின் வட்டாரப் பொறுப்பிலிருந்து மாவட்ட மாநில, அகில இந்தியப் பொறுப்புகள் வரையில் பல்வேறு பொறுப்புகளில் குறிப்பாக அமைப்பு நிலை, தொழிற் சங்கத்தலைமை, பத்திரிகைத்துறை, பிரச்சாரத்துறை, பிரசுரத்துறை கட்சிக்கல்விப் பயிற்சித்துறை (சித்தாந்தத்துறை) முதலிய பல துறைகளிலும் பணியாற்றியுள்ளார். கட்சியின் உயர்ந்த அமைப்பான தேசீயக் கவுன்சிலில் இருபத்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்து. மாநில, மத்தியப் பொறுப்புகள் பலவற்றில் இருந்து பணியாற்றியுள்ளார். தமிழ் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாநில அளவில் அமைப்பு நிலை, சித்தாந்தப் பயிற்சி, பத்திரிகை பொறுப்புகள் வகித்து இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கட்சியின் உயர் மட்டக் குழுவின் பிரதிநிதியாக அன்றைய சோவியத் யூனியன் (ரஷ்யா-மாஸ்கோ, லெனின் கிராட், ஆர்மீனியா, ஆஜர்பைஜான்) மற்றும் செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து சுற்றுப் பயணம் செய்துள்ளார். தொழிற்சங்கத்தலைவராக... திரு. அ. சீனிவாசன் 1950ஆம் ஆண்டு காலத் தொடக்கத்திலேயே இராஜபாளையம், சிவகாசி, சத்திரப்பட்டி, தளவாய்புரம், விருதுநகர், சாத்துர், அருப்புக்கோட்டை, ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் பஞ்சாலை, அச்சு தீப்பெட்டி, கத்தறி மற்றும் பல தொழில்கள் தொடர்பான தொழிலாளர் சங்கங்கள் பலவற்றை தொடங்கியும், உருவாக்கியும், தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். மாநில அளவிலும் பல தொழிற் சங்கப் பொறுப்புகளில் இருந்து பணியாற்றியுள்ளார். பின்னர் திரு. அ.சீனிவாசன் தனது தொழிற் சங்கப் பொறுப்புகளில் சென்னைக்கு மாற்றப்பட்டு, சென்னையில் ஹார்பர், ஆவடி டாங்க் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின்நிலையம் ஆகிய துறைகளில், தொழில் நிறுவன அளவிலும், அகில இந்திய அமைப்பு வரையிலும், பொறுப்புகள் வகித்து தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். திரு. அ.சீனிவாசன் சென்னை டாக் லேபர் போர்டு உறுப்பினராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டு அந்தப் பொறுப்பில் தொழிலாளர் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தல் வளர்முக நாடுகளில் இளம் தொழிலாளர்களுக்கு மறுக்கப் பட்டுள்ள வாய்ப்புகள் என்னும் தலைப்பிலும், மற்றும் இளம் தொழிலாளர்களின் பொதுப் பிரச்சினைகள் பற்றியும், உலக தொழிற்சங்க சம்மேளத்தின் சார்பில் பல்கேரிய நாட்டில் வார்னா நகரில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர் மகாநாட்டில் இந்தியத் தொழிலாளர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அம் மாநாட்டில் இந்திய நாட்டின் இளம் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றிய அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை உலகத் தொழிலாளர் சம்மேளத்தின் ஆவணங்களின் பகுதியாகச் சேர்க்கப் பட்டிருக்கிறது. 1980ஆம் ஆண்டுகளில் உலக தொழிற்சங்க சம்மேளனமும், சமாதானம் மற்றும் சோஷலிஸம் பற்றிய பிரச்சினைகளும் என்னும் சர்வதேச இதழும் சேர்ந்து நடத்திய கருத்தரங்கில் வளர்முக நாடுகளில் பொதுத்துறையின் பங்கும் பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் இடையிலான உறவு தொடர்புகள் பற்றிய பிரச்சினைகள் பற்றி டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு.அ. சீனிவாசன் இந்தியாவில் பொதுத்துறைக்கும் தனியார் துறையில் உள்ள நடுத்தா மற்றும் சிறு தொழில்களுக்கும் இடையிலான உறவு என்னும் தலைப்பில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்து, அது உலக தொழிற்சங்க ஆவணத்தில் பதிவாகியுள்ளது. பத்திரிகையாளராக... தொழிற்சங்கத் தலைவராக இருந்த காலத்தில் தொழிற் சங்கச் செய்தி ஹார்பர் தொழிலாளி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியர் பொறுப்பில் பணியாற்றியுள்ளார். கட்சியின் மாநிலத்துணைச்செயலாளராக இருந்தபோது கட்சியின் பத்திரிகையான ஜனசக்தி வார இதழ் மற்றும் நாளிதழ்களில் தலைமை ஆசிரியராக எட்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கட்சியின் சித்தாந்த ஏடான மார்கசிய ஒளி மாதஇதழின் தலைமை ஆசிரியராக இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.