பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப் பண்பா டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 2 தமிழி தற்காலத்தில் ஒரு காவியம் எழுத வேண்டும் என்று கருதி பாஞ்சாலி ச த h i ன்றும் பெயரில் ஒரு சிறப்பு மிக்க சிறு காவியத்தைப் பாடியுள்ளான். பாரதியின் பாடல்களைப்படிக்கும்போது, பாடும்போது, படுவதைக்கேட்கும் போது, பாரதியின் தேச பக்தியை, மொழிப்பற்றை, தமிழ்ப்பற்றை, தெய்வபக்தியை, மனிதாபிமானத்தை, அவனுடைய தத்துவதரிசனத்தை, தலை சிறந்த கவித்வத்தை கருத்தாழத்தைக்கான முடி கிறது. பாரதியின் பன்முகப் பரிமாணங்களையும் உலகப் பெருவடிவத்தையும்காண முடிகிறது. பாரதி எதைப் பற்றிப் பாடினாலும், எந்தத் துறையைத் தொட்டுத்தனது கவிதைகளை வடித்தாலும் பாரத நாட்டு பண்பாட்டு தளத்தில் நின்றும் தமிழ்நாட்டின் தனித்தன்மையில் நின்றும் பாடியுள்ளான். பாரத மண்ணில் வேர்விட்டு ஆலவிருட்சமாய்ப் படர்ந்து நமக்கு நிழல்தருகிறான். பாரதி பாரதப்பண்பாட்டிலும் பாரதத்தின் மரபு வழியிலும் உறுதியாக வேர் ஊன்றி நிற்கும் அதே தருணத்தில் அவன் சிதைந்து போன, காலத்திற்கு ஒவ்வாத பழமை வாதக்கருத்துக்களை உதரி எரிந்து விட்டு புதுமைக்கருத்துக்களை உருவாக்கி பாரதத்தின் பண்பாட்டு தளத்தை மேலும் விரிவு படுத்தியுள்ளான், செழுமைப் படுத்தியுள்ளான். பாரதியின் கவிதா மண்டலத்தின் அகலத்தையும் ஆழத்தையும் விரிவையும் பரப்பையும் பன்முகப்பரிமாணங்களையும் மென்மேலும் இடைவிடாமலும் தொடர்ச்சியாகவும் பல வழிகளிலும் மக்களிடம் கொண்டு சென்று சமுதாயமுன்னேற்றத்திற்கான பங்கைச் செலுத்த வேண்டும். பாரதி தான் வாழ்ந்த காலத்தில் வறுமை, வாய்ப்பின்மை, வசதிக்குறைவுகள், அன்னிய ஆட்சியின் அடக்கு முறைக்கொடுமைகள், இடை விடாத போலீஸ் வேட்டை காரணமாக அனுபவித்த துன்பதுயரங்களுக்கு அளவே இல்லை. அந்த கோரங்களைத் தாண்டித்தான் பாரதி ஒரு மாபெரும் கவிஞனாக ஒரு மாபெரும் மனிதனாக நமது நாட்டின் தலை சிறந்த அறிவுச் செல்வர்களின் ஞானிகளின் சித்தர்களின் வரிசை யில் நின்று தனது உலகப் பெருவடிவத்தை தனது விஸ்வரூபத்தைக் காட்டியுள்ளான். பாரதி தனது தேசபக்திப் பாடல்களுக்கான முன்னுரையில் சமர்ப்பணமாகக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.