பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 93 3. வரலாற்றுச்சிறப்புமிகக பேரறிஞர்கன். ஞானிகன், பெரிமோகன் பற்றி இந்திய நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து, இப்பாரம்பரியங்களையும் மரபுகளையும் தொடர வேண்டும் என்பதைப் பாரதி தனது பாடல்களில் சுட்டிக்காட்டுகிறார். இதில் தமிழ் நாட்டின் வளமான பாரம்பரிய மரபுகளுக்குத் தனி இடம் இருப்பதையும் காணலாம். ஆதி சங்கரரும், இராமானுஜரும் மத்துவரும், கம்பனும், வள்ளுவரும், இளங்கோவடிகளும், காளிதாசனும், பாஸ்கரனும், புத்தனும், ஒளவையும் அகத்தியரும், பாணினியும், சேரசோழ பாண்டியர்களும், சிவாஜியும், குருகோவிந்தரும், தாயுமானவரும் வள்ளலாரும். பாரதியின் கவிதைகளில் நாம் காணும் வாழையடி வாழையாக வந்த வழிகாட்டிகளாகும். "புத்த பகவான்- எங்கள் புத்த பகவான் - அவன் சுத்தமெய்ஞ்ஞானச் சுடர்முகம் கண்டேன்" என்று பொன்மரத்தின் கீழ் சின்மயமான தோர் தேவன் புத்தபகவானைக் கண்டேன் என்று பாரதி பாடுகிறார். வானில் பறக்கின்ற பறவைகள், மண்ணில் திரியும் விலங்குகள், கானில் வளரும் மரங்கள், காற்று, புனல் கடல், விண்ணில் தெரியும் மீன்கள், வெட்ட வெளியின் விரிவு மண்ணில் கிடக்கும் புழுக்கள், உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் நான் என்று கூறும் பாரதி, "கம்பன் இசைத்த கவியெலாம் நான் காருகர்திட்டும் உருவெலாம் நான்" என்று பாடுகிறார். "சாதியிரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகள் சொல்லிய சொல்அமிழ்தமென்போம் நீதி நெறியினில் நின்று பிறர்க்குதவும் நேர்மையவர் மேலவர், கீழவர் மற்றோர் என அவ்வை கூறிய சொற்களை நினைவூட்டி பாரத தேச மக்களுக்கான ஒரு புதிய திட்டத்தை பாரதி முன்வைக்கிறார். ஆழ்வார்கள், ஆண்டவனுக்கு அரங்கநாதனுக்கு பள்ளியெழுச்சி பாடினார்கள். அந்த மரபில், துக்கத்தில் இருந்த பாரத நாட்டு மக்களைத்தட்டி