பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 98 என்று தனது திட்டத்தை நம் முன்வைத்து அதை நிறைவேற்ற நமக்குக் கட்டளையிடுகிறார். " தமிழ்ச்சாதி என்னும் தலைப்பில் 'சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் திருக்குறளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும் எல்லையொன்றிமை யெனும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழ்ச்ச ாதியை அமரத்தன்மைவாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன் என்று குறிப்பிட்டு தமிழகத்தில் உள்ள போலிப்புதுமை வாதிகளுக்கும் பழமை வாதிகளுக்கும் இடையில் நடைபெறும் வழக்காடல்களைக் கண்டனம் செ ய்து தனது கருத்தாக == "நன்மையும் அறிவும் எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்விராயின் அச்சமொன்றில்லை' என்று கூறுகிறார். பாரதியின் இந்தக் கருத்து எக்காலத்துக்கும் எல்லா நாட்டினருக்கும் பொருந்துவனவாகும். வீண்பழம் பெருமை பேசும் பழமைவாதிகளுக்கும் போலிப்புதுமை வாதிகளுக்கும் சிறந்த அறிவுரையாகும். சுயசரிதையில் பாரதியின் கவிதைகளில் ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பு சுயச ரிதைத் தொகுப்பாகும். அத்தொகுப்பில் ஆங்கிலப் பயிற்சி என்னும் தலைப்பில் ஆங்கிலேய ஆட்சியினர் நமது நாட்டில் புகுத்திய கல்வி முறையைப் பற்றி பாரதி கடுமையாகச் சாடுகிறார். அதில் நமது நாட்டின் வரலாற்று மரபில் எழுந்து வளர்ச்சி பெற்றிருந்த அறிவுச் செல்வங்களைப் பற்றி பாரதி சுட்டிக் காட்டியிருப்பது மிகச் சிறப்பான செய்தியாகும். பாரத நாட்டிற்கான ஒரு புதிய கல்வித்திட்டத்தின் பகுதியாக ஒரு புதிய கல்விக் கொள்கையை பாரதி வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம். பாரதி கூறும் அந்தக் கல்விக் கொள்கை இன்றும் கூட நமக்கு நன்கு பொருந்துவதாக உள்ளது. - நமது நாடு விடுதலை பெற்றவுடன் நமது கல்விக் கொள்கையில் மாற் ற ம் காண வு ம் , பு தி ய கல்வி க் கொள் ைக ைய யும் பாடத்திட்டங்களையும் வகுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் அத்தீர்மானம் செயலுக்கு வரவில்லை என்றே கூறலாம். இன்றும் கூட நமது பாடத்திட்டங்களில் அடிப்படையில் பழய ஆங்கிலக் கல்வியின் வழிமுறையே நீடிக்கிறது என்பதைக் காண முடிகிறது.