பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் | OO ஞானமீதில் இலக்கணம் கண்டதும் இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும் சேரன்தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வவள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பாரளித்துத் தர்மம் வளர்த்ததும் பேரருள் சுடர்வாள் கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும் விரர் வாழ்த்த மிலேச்சர்தம்திய கோல் விழத்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் அன்னயாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுட்போகுநர் முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள் என்ன கூறிமற்றெங்கணுணர்த்துவேன் இங்கிவர்க்கெனதுள்ளமெரிவதே "ஐயர் என்றும் துரையென்றும் மற்றெனக்கு ஆங்கிலக்கலை யென்றொன்றுணர்த்திய பொய்யருக்கிது கூறுவன், கேட்பிரால் பொழுதெலாம் உங்கள் பாடததில் போக்கி நான், மெய் அயர்ந்து விழி குழி வெய்திட விறிழந்து எனதுள்ளம் நொய்தாகிட ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கியென் அறிவு வாரித்துரும் பென்றலைந்ததால் செலவு தந்தைக்கு ஓராயிரஞ் சென்றது திதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன நலமோரெட்டுனையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்" என்று சத்தியப்பிரமாணம் ச்ெயது பாரதி ക്കി முடித்துள்ளார். ஆங்கிலக் கல்வி பற்றிய பாரதியின் கருத்துக்களும் அவைகளின் இன்றைய பொருத்தங்களும் ஆழ்ந்து சித்திக்கத்தக்கன. ஆய்வு செய்யத்தக்கன.