பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 103 வீரரும் வரிசை விரித்திடுபுலவரும் பாரெல்லாம் பெரும்புகழ் பரப்பியநாடு என்று கூறுகிறார். == தர்மமே உருவமாய்த் தழைத்த பேரரசரும் நிர்மல முனிவரும் நிறைந்த நன்னாடு என்றும் விரரைப் பெறாத மென்மை தீர்மங்கையை ஊரவர்மலடி என்றுரைத்ததிரு நாடு என்றும் கூறி பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன்புதல்வர் இந்நினைவகற்றாதீர் பாரத நாடு பாருக்கெலாம் திலகம் நீ ரதன் புலவர் இந்நினைவகற்றாதீர் என்று படைவீரர்களுக்கு வீரமூட்டுகிறார். பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் வீமனும் துரோணனும் வீட்டுமன்தானும் ராமனும் வேறுள இருந்திறல் வீரரும் நற்றுணை புரிவர்வானக நாடுறும் வெற்றியேயன்றி வேறெதும் பெறுகிலேம் என்று நம்பிக்கையூட்டுகிறார். வஞ்சகர், தியர், மனிதரைவருத்துவோர் நெஞ்சகத்தருக்குடை நீசர்கள் - இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மையோடொறுத்தல் வீரர்தம் செயலாம் என்று கீதையின் தத்துவத்தைக் காட்டி பேடிமையகற்று நின்பெருமையை மறந்திடேல் ஈடிலாப்புகழினாய் எழுகவோ எழுக என்று உணர்வூட்டி அன்னியரை எதிர்த்துப் போரிட அரைகூவி அழைக்கிறார். குருகோவிந்தர் ஆயிரத்தெழு நூற்றம்பத்தாறு விக்ரமனாண்டு, வீரருக்கமுதாம் ஆனந்த புரத்திலார்ந்தினிதிருந்தனன் பாஞ்சாலத்துப்படர்தரு சிங்கக் குலத்தினை வகுத்த குருமனியாவான்