பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 105 4. தேசியத்தலைவர்க ைபற்றி: பாரதி நமது நாட்டின் தேசிய விடுதலை இயக்கத்தில்முன்னணியில் நின்றார் என்பதை அனைவரும் அறிவர். அவர் தேசீய மகாகவி, புரட்சிகரஜன நாயகப்பெரும்புலவராக விளங்கியவர். சிறந்த பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். பத்திரிகைத்துறையில் புதிய பல உத்திகளையும் கையாண் டு தமிழ் ப் பத் தி ரிக் கைத் துறை க்கு மு ன்னோடி யாக விளங்கியுள்ளார். அவர் தேசீய காங்கிரஸ் மகா சபையில் தீவிரவாதப் பிரிவுக்கு ஆதரவளித்தார். வடக்கில் பாலகங்காதரத்திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திரபால் முதலியவர்களுக்கு ஆதரவு கொடுத்தார். தமிழ் நாட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, சிங்கார வேல் செட்டியார், மண்டயம் சீனிவாசாச்சாரியார், வா.வே.சு அய்யர்முதலியவர்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்றியுள்ளார். பின்னர் தாகூர், மகாத்மா காந்தி, ஆகியோருக்கும் ஆதரவளித்தார். ஆயினும் கால மாற்றத்தாலும் காலத்தின் கட்டாயத்தாலும் , சூழ்நிலைமைகளின் காரணங்களாலும் பாரதி தனது அரசியல், தத்துவ, சமு தாயக் கருத்து க்க ைளச் சற்று தி ரு த் தி யு ம் மாற்றி யு ம் வெளிப்படுத்தியிருந்தாலும் அவருடைய தீவிரக் கருத்துக்களே அவருடைய கவிதைகளில் உயிரும் உணர்வு மாக இழையோடி தனித்தன்மை பெற்றிருக்கின்றன. பாரதி தனது பாடல் தொகுப்புகளில் தாகூர், மகாத்மாகாந்தி, பால கங்காத ரத்திலகர், வ. உ. சிதம்பரம் பிள்ளை தாதாபாய் நவுரோஜி, விவேகானந்தர், லாலாலஜபதிராய் முதலியோரைப்பற்றி பல பாடல்களைப் பாடியுள்ளார். பாரதி பாடிய தேசீய கீதங்களில் பாரத மாதா நவரத்தின மாலை ஒரு சிறந்த பாடலாகும். இப்பாடலில் ரவிந்திர நாதர்ைக்குறிப்பிடுகிறார். மோகனதாஸ்கரம் சந்திரகாந்தியைப் பாராட்டிப் போற்றுகிறார். பாரதம் காட்டவல்ல புதிய நெறியைக் காட்டுகிறார். அன்னையே அந்நாளில் அவனிக்கெல்லாம் ஆணிமுத்துப் போன்ற மணிமொழிகளாலே பன்னி நீ வேதங்கள், உபநிடதங்கள் பரவு புகழ்புராணங்கள் இதிகாசங்கள்