பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 107 "முற்றும் பேண முற்பட்டு நின்றார் பாரதமக்கள் இதனால் படைஞர்தம் செருக்கொழிந்து உலகில் அறம்திறம்பாத கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே வெற்றி கூறு மின் வெண்சங்கு ஊதுமின் என்று காந்தியின் தலைமையில் புது நெறியை நிலைநாட்ட பாரத மக்கள் முன்வந்துள்ளதாக காந்தியை பாரதி பாராட்டுகிறார். இங்கு அரசியல் நெறியிலும் சரி இதர இயல் அனைத்திற்கும் அறவழியே சிறந்தது என்று நமது சாத்திரங்கள் கூறுவதை பாரதி இங்கு தெளிவாக வலியுறுத்திக் கூறுகிறார். காந்தி நெறியை தீது சிறிதும் பயிலாச் செம்மணிமா நெறி என்றும் அந்த ஒத்துழையாமை என்னும் அகிம்சா நெறியால் விடுதலை நிச்சயம் என்றும் கூறிக் களிப்படைகிறார். "திதுசிறிதும் பயிலாச் செம்மணிமா நெறி கண்டோம் வேதனைகள் இனி வேண்டா, விடுதலையோ திண்ணமே" என்று பாடுகிறார். "விடுதலை பெறுவீர் விரைவா நீர் வெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும் கெடுதலின்றி நம்தாய்த் திருநாட்டின் கிளர்ச்சி தன்னை வளர்ச்சி செய்கின்றான் சுடுதலும் குளிரும் உயிருக்கில்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை எடுமினோ அறப்போரினை யென்றான் எங்கோ மேதக மேந்திய காந்தி என்றும் "பாரதப் பொன்னாடெங்கும் மாந்தரெல்லாம் சோர்வை அச்சத்தை மறந்து விட்டார் "காந்தி சொற்கேட்டார், காண்பார் விடுதலைகணத்தினுள்ளே" என்று கூறி காந்தி வழியில் இந்திய விடுதலை உறுதி என்று காலத்தைக் கணித்துக் கூறுகிறார்.

மகாத்மா காந்தி பஞ்சகம் என்னும் தலைப்பில் காந்தியைப் பற்றி பாரதி மிகவும் சிறப்பானதொரு பாடலைப் பாடியுள்ளார். வாழ்க நீ எம்மான் என்று தொடங்கி இந்த வையதது நாடடில எலலாம தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்