பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 108 பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் அடிமை வாழ்வு அகன்று இந்நாட்டார் விடுதலை பெற்று செல்வம் குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கிப் படி மிசைத் தலைமை எய்தும் . படிக்கொரு சூழ்ச்சி செய்தாய் முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மை பெற்றாய் என்று காந்தியைப் போற்றிப் பாடுகிறார். மகாத்மா காந்தியின் அரசியல் போராட்ட உத்திகளில் ஒன்று ஒத்துழையாமை இயக்கம். இந்த அறப்போரை முதலாம் உலகப் போர் முடிவுற்ற பின்னர் 1919-22ம் ஆண்டுகளில் காந்தி துவக்கினார். அதை வரவேற்றுப் பாராட்டி காந்திக்கு வாழ்த்துக் கூறிய பாடலில், பாரதி இந்திரசித்தன், இராமாயணப் போரில், இலக்குவனையும் அவனுடன் இருந்தவானரப்படையினரையும் தனது நாகபாசத்தால் வீழ்த்தி விட்டான். அனைவரும் மயக்கமடைந்து மண்ணில் சாய்ந்து கிடந்தனர். இந்த மயக்கத் தி லிருந்து இலக்கு வனையும் வானரப்படைவீரர்களையும் எழுப்பச் செய்வதற்கு அனுமன் உயிர் எழுப்பும் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையைத்தனது ஆற்றலால் சுமந்து கொண்டு வந்தவன். இந்த அனுமனுக்கொப்ப, மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் பாரத மக்களைத்தட்டி எழுப்ப, காந்தி ஒத்துழையாமை என்னும் மூலிகையைக் கொண்டு வந்தான் என்று உவமையுடன் கூறும் வகையில், "கொடிய செந்நாக பாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவனென்கோ" என்று காந்தியைப் பாராட்டிப்பாடுகிறார். ஆயர் பாடியை இடி மின்னல் மழை தாக்கியபோது জ, রেক্টা ককা ক্টো கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து ஆயர்குல மக்களைக் காப்பாற்றியதைப் போல அந்நிய ஆட்சியால் தாக்குண்ட பாரத மக்களைக் காப்பாற்றுவதற்கு காந்தி ஒத்துழையாமை என்னும் குடையைக் கொண்டுவந்தான் என்னும் முறையில் "இடி மின்னல் காக்கும் குடைசெய்தான் என்கோ என்று குறிப்பிட்டு