பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 110 "கல்வியைப் போல் அறிவும் அறிவினைப் போலக் கருணையும் அக்கருணை போலப் பல்வித ஆக்கங்கள் செய்யும் திறனுமொரு நிகரின்றி படைத்த வீரன்" என்றும் வில்விறலாற் போய் செய்தல் பயனிலதா மெனவதனை வெறுத்தேயுண்மைச் சொல்விறலால் போர் செய்வோன் பிறர்க்கன்றித் தனக்குழையாத்துறவியாவோன்' என்றும், "தாதாவாய் விளங்குறு நற்றாதாவாய் நவுரோஜி சரணம் வாழ்க" என்று புகழ்ந்து பாராட்டிப் பாடுகிறார். லோகமான்ய பாலகங்காதரத் திலகர் இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் திலகர். "சுந்திரம் எனது பிறப்புரிமை" என்று அன்னிய ஆட்சியிலிருந்து பாரத நாடுவிடுதலை பெறுவதற்கு மிகத் தீவிரமாகப் போராடியவர். இந்திய தேசீய காங்கிரஸில் தீவிரவாதப் பிரிவின் தலைவராக விளங்கினார். திலகர் மீது பாரதி மிகவும் பற்று கொண்டவராகஇருந்தார். 1905 ம் ஆண்டுகளில் தேசிய காங்கிரஸ் மகா சபையில் தீவிரவாதிகள் என்றும் மிதவாதிகள் என்றும் பிரிவுகள் தோன்றியபோது திலகர் லஜபதிராய் போன்றோர் தீவிர வாதிகளின் தலைவர்களாக இருந்தனர். பாரதி தீவிரவாதிகளை ஆதரித்தார். இந்த முறையில் திலகரைப் பற்றியும் லஜபதிராய் அவர்களைப் பற்றியும் சிறந்த பாடல்களை பாரதி பாடியுள்ளார். " வாழ்க திலகன் நாமம்" என்னும் பாரதியின் பாடல் அக்காலத்தில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாகும். சுதந்திரப் போராட்டத்தில் மக்களுக்கு உணர்வும் ஊக்கமும் ஊட்டுவதற்கு தேசபக்தர்களுக்கு இப்பாடல் ஒரு பேராயுதமாக விளங்கிற்று. "வாழ்கத்திலகன் நாமம் வாழ்க வாழ்கவே விழ்கக் கொடுங்கோன்மை விழ்கவிழ்கவே என்னும் விர முழக்கத்துடன் இப்பாடல் துவங்குகிறது. "நாலு திசையும் ஸ்வாதந்தர்யநாதம் எழுகவே நரகமொத்த அடிமைவாழ்வுநைந்து கழிகவே