பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் I 11 ஏலுமனிதர்அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே" என்று அவ்வீரமுழக்கம் வேகத்துடன் தொடர்கிறது. "கல்வியென்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான்- நல்ல சோர்வெனும் பேயை ஒட்டும் சூழ்ச்சி அவன்பெயர் அன்பெனும் தேனுறித்ததும்பும் புதுமலர் அவன் பேர் என்றும் துன்பம் என்னும் கடலைக் கடக்கும் தோணியவன் பெயர் சோர்வெனும் பேயை ஒட்டும் சூழ்ச்சி அவன்பெயர் அன்பெனும் தேனுறித்ததும்பும் புதுமலர் அவன்பேர் ஆண்மையென்னும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன்பெயர் என்னும் விடுதலை முழக்கங்களைத் திலகன் நாமத்தின் விர முழக்கங்களாக பாரதி பாடல் மக்களிடம் விடுதலைப் போராட்ட வீரர்களிடம் இடம் பெற்றது. விடுதலைப் போராட்டத்தின் தணியாததாகமாக பாரதி பாடல் விளங்கியது. தேச விடுதலை யுடன் அச்சம் ஒழியவும் கல்வியும் நல்ல கருத்துக்களும் வளரவும் துன்பத்தைத் துடைக்கவும் சோர்வு எனும் பேய்களை விரட்டவும்.அன்பை வளர்க்கவும் ஆண்மை ஓங்கவும் பாரதி திலகன் பெயரால் பாடுகிறார். அச்சமும் கல்லாமையும் துன்பங்களும் சோர்வும் அடிமைத்தனத்தோடு இணைந்தவை. எனவே அடிமைத்தனம் போகும்போது அதனுடன் இணைந்துள்ள இதர தீமைகளும் நீங்கும் என்பது பாரதியின் முழு விடுதலை தத்துவமாகும். லாலா லஜபதி ராய் லாலா லஜபதி ராய் பாஞ்சால சிங்கம் என்று புகழ் பெற்றவர். தேசிய விடுதலை இயக்கத்தின் தீவிரவாதப் பிரிவில் முன்னணியில் நின்றவர். விடுதலைப் போராட்டத்தில் பாஞ்சால மக்கள் மிகுந்த வீரத்துடனும் வேகத்துடனும் கலந்து கொண்டனர். ஆங்கில ஆட்சியாளர்கள் பாஞ்சால மக்கள் மீது தங்கள் கொடிய அடக்கு முறையை ஏவிவிட்டார்கள். ஜாலியன் வாலாபாக்படுகொலையை நடத்தி வெறிபிடித்து மக்களை வதைத்தனர். அந்த விர மிக்க விடுதலைப் போராட்டத்தின் தலைவன் லாலா லஜபதி ராயை நெஞ்சிலே லத்திகளால் அடித்து குற்றுயிராக்கி கொடுந்தண்டனை கொடுத்து நாடு கடத்தி பர்மாவிலுள்ள மாண்டலே சிறையில் அடைத்தனர். அவர் நினைவாக பாரதி எழுதிய பாடல் நெஞ்சை உருக்கும் ஒரு நிகரில்லாத இலக்கியமாகும்.