பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 4 பாரதியின் படைப்புகளில் காலத்தை வென்றவைகளில் ஒன்று பாரதியின் பகவத்கீதையின் மொழிபெயர்ப்பாகும். பாரதி வட மொழியையும் தமிழ் மொழியையும் நன்கு அறிந்தவன். பாரதி கண்ணனையும் பார்த்தனையும் பாரத நாடாகவே கண்டு பகவத்கீதையை தமிழாக்கம் செய்துள்ளான். பகவத்கீதை என்றும் மகத்தான பாரதத்தின் அறிவுக்களஞ்சியம், தெய்வீகப் சக்தி மிக்க ஒரு மகத்தான் பேரிலக்கியம், மறை பொருளாகப்போய்விடாமல், வழிபாட்டு அறைகளிலே மட்டுமே முடங்கி விடாமல், மக்கள் அனைவருக்குமான பொதுச் சொத்தாக புதிய ச காப்தத்தில் புதிய பொலிவோடும் தெளிவோடும் நமது பாரம்பரிய பண்பாட்டுச் செல்வமான அந்த பகவத்கீதையை பாரதி தனது தனித்தன்மையோடு தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை நமது தவப்பயனாகும். * பாரதி பகவத்கீதையைத் தமிழில் மொழியாக்கம் செய்ததுடன் அந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை ஒரு தனியான தனிச்சிறப்பான பேரிலக்கியமாகும். பாரதியின் கவிதைத் தொகுப்புகளிலே கண்ணன் பாட்டும், பாஞ்சாலி பதமும் தனிச்சிறப்புமிக்க கவிதைகளாகும், என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுளோம். கண்ணன் பாட்டிற்கு முகவுரை எழுதிய நெல்லையப் பிள்ளையவர்கள் பாரதியாருக்கு கண்ணபிரான் மீதுள்ள அதி தீவிர பக்தி காரணமாக இந்நூலில் உள்ள பாடல்கள் வெளியாயின. இவை தமிழர்களுக்கு நல்விருந்தாகும் என்று குறிப்பிட்டுள்ளார். " பாரத நாட்டின் குல தெய்வமாகிவிட்ட கண்ணனுக்கு பாமாலை சூட்டாத கவிகள் அருமை. தன்னை நெடுநாட்களாக மறந்திருந்த பாரத நாடு திடீர் என விழித்துக் கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி கீதா சாஸ்திரத்தைக் கூறிப்பார்த்தனுடைய ரதத்தை வெற்றிபெற ஒட்டிய கண்ணபிரானுடைய உருவமே. இந்த உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது" என்று வா.வே.சுப்பிரமணிய அய்யர் குறிப்பிடுகிறார். -- பாரதியின் பாஞ்சாலி சபதம் ஒரு தனிப் பெரும்காவியம். மகாபாரதக்கதையின் ஒரு முக்கிய திருப்பத்தைக்குறிக்கும் முக்கியமான நிகழ்ச்சியை வைத்து இக்காவியம் எழுதப்பட்டது. எனினும் பாஞ்ச ாலியின் வடிவத்தில் பாரதி பாரத தேவியையே கண்டார். பாண்டவர்கள் அடிமைப்பட்டதை, பாரததேசம் அடிமைப்பட்டதாகவே பாரதி காண்கிறார். பாண்டவர்களும் பாஞ்சாலியும் சபதம் செய்வதை பாரத நாட்டின் விடுதலைக்காக பாரத மக்கள் சபத மேற்பதாகவே பாரதியின்