பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 112 "விண்ணகத்தேயிரவிதனைவைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ? என்று தொடங்கி லஜபதியை நாடு கடத்தி வெகு தொலைவில் கொண்டுபோய் வைத்தாலும் அவனது வீரத்தை மறக்க மாட்டோம். விடுதலைப் போராட்டம் அவனிடமிருந்து ஆதர்சத்தைப் பெறும். நல்லவர்களுக்கு சோதனைகள் ஏற்படுவதை நாடு கண்டிருக்கிறது என்று பாரதி கூறுகிறார். "பேரன்பு செய்தாரில் யாவரே பெருந்துயரம்பிழைத்து நின்றார் ஆரன்பு நாரணன் பால் இரணியன் சேய் செய்ததினால் அவனுக்குற்ற கோரங்கள் சொலத்தகுமோ? - பாரத நாட்டில் பத்தி குலவிவாழும் வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம் பலவடைதல் வியத்தற் கொன்றோ? என்று பாடிநமக்கு ஆறுதல் கூறுகிறான் பாரதி. நாரணன் மீது அன்பு கொண்ட பிரகலாதன் அடைந்த துன்பங்களை ஒப்பிட்டு லஜபதி தன் தாய் நாட்டின் மீது அன்பு கொண்ட காரணத்தால் இரணியனைப் போல கொடுங்கோல் ஆட்சியாளர்களான வெள்ளையர் ஆட்சி அவர்மீது இழைத்த கொடுமைகளைச் சுட்டிக் காட்டியது சிறப்பாகும். அது பாரதி வழியாகும். லஜபதி ராய் பிரலாபம் என்னும் தலைப்பில் பாரதி எழுதியுள்ள பாடல் மிகச் சிறந்த ஒரு இலக்கியமலராக அமைந்துள்ளது. பாரதியின் இந்தப்பாடல் சிறப்புமிக்கது. அதற்கு ஈடு இணையில்லை. லஜபதி ராய் நாடு கடத்தப்பட்டு மாண்டலே சிறையில் அடைப்பட்டுக் கிடக்கும் போது தனது பிறந்த மண்ணை நினைந்து எண்னமிடும் காட்சியாக பாரதி இப்பாடலை அமைத்துள்ளார். "நாடிழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து வீடிழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே . வேத முனிபோன்றோர் விருத்தராம் எந்தையிரு பாதமலர்கண்டு பரவப்பெருவேனோ? "ஆசைக் குமரன் அருச்சுனனைப் போல்வான்றன் மாசற்ற சோதிவதன மினிக் காண்பேனோஎன்றெல்லாம் லஜபதியின் பிரலாபமாக பாரதி கூறுகிறார்.