பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 114 அந்தக் கொடுமைகளுக்கெதிராக துத்துக்குடி யிலும் திருநெல்வேலியிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் அர்த்தால்கள் நடைபெற்றன. அன்னிய ஆட்சியாளர்களின் தடியடிகளும் துப்பாக்கிப்பிரயோகங்களும் மக்களை வ ைத த் தன. இப் போராட் டங்க ளு க் குத் த ைல ைம தாங் கி வ. உ. சிதம் பரம் பிள்ளை சுப்ரமணிய சிவா ஆகியோர் அன்னிய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு ஜன்மதண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டு கடுங் காவ லி ல் செக் கி ழுக்க வைத்த னர். இதற்குக் съ т тбтотшп топлт வெள்ளைக் காரக் கலெக்டர் ஆஷ் துரையை மணியாச்சி ஜங்ஷனில் வாஞ்சிநாதன் என்னும் இளம் தேசபக்தன் சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் கொண்டான். இத்தகைய தீவிரப் போராட்டநிகழ்ச்சிகள் நாட்டைக் குலுக்கிக் கொண்டிருந்தன. ஆங்கிலேய கலெக்டர் விஞ்சு துரைக்கும் தேசபக்தச் செம்மல் வ.உ.சிதம்பரம்பிள்ளைக்கும் வாக்குவாதம் நடந்ததாகக் கற்பித்து பாரதி அன்றய அடக்கு முறைக் கொடுமைகளையும் அதை எதிர்த்து தேச பக்தர்களின் பதிலுமாக ஒரு அருமையான பாடல் வரிகளைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் அக்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் துணிவுடன் பாடிய பாடல்களாகும். இந்த இரு பாடல்களும் இங்கு முழுமையாக நினைவு கூறத்தக்கதாகும். ஆங்கிலேய அதிகாரி சுதேசபக்தன் சிதம்பரம் பிள்ளைக்குக் கூறியது: நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் கனல் - மூட்டினாய் வாட்டியுன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன் வலி - காட்டுவேன். கூட்டங்கூடி வந்தேமாதரமென்று கோவித்தாய் - எமைத்துவித்தாய் ஒட்டநாங்கள் எடுக்க வென்றே கப்பல் ஒட்டினாய் - பொருள் - ஈட்டினாய் கோழைப்பட்ட ஜனங்களுக்குண்மைகள் கூறினாய் - சட்ட- மீறினாய் ஏழைப் பட்டிங்கிறத்தல் இழிவென்றே யேசினாய் - விரம் - பேசினாய் * அடிமைப்பேடிகள் தம்மை மனிதர்கள் ஆக்கினாய் - புன்மை - போக்கினாய் மிடிமை போதும் நமக்கென்றிருந்தோரை மீட்டினாய் - ஆசை-யூட்டினாய் தொண்டொன்றே தொழிலாக்கொண்டிருந்தோரைத் துண்டினாய் - புகழ் - வேண்டினாய் கண்ட கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய் - சோர்வை - போட்டினாய்.