பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 115 எங்குமிந்தஸ்வராஜ்ய விருப்பத்தை ஏவினாய் - விதை - துவினாய் சிங்கம் செய்யும் தொழிலைச்சிறுமுயல் செய்யவோ நீங்கள் - உய்யவோ? சுட்டுவீழ்த்தியே புத்திவகுத்திடச் சொல்லுவேன் - குத்திக் - கொல்லுவன்ே தட்டிப்பேசுவோருண்டோ? சிறைக்குள்ளே தள்ளுவேன் பழி - கொள்ளுவேன்" ஆங்கிலேய அதிகாரியின் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் தேச பக்தன் சிதம்பரம் பிள்ளை பதில் கூறுவதைப் பாரதி மிக அற்புதமான சுதந்திர உணர்வுடன் கூறுகிறார். 1. சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் - இனி அஞ்சிடோம் எந்த நாட்டினுமிந்த அநீதிகள் ஏற்குமோ - தெய்வம் - பார்க்குமோ? வந்தே மாதரம் என்றுயிர்போம்வரை வாழ்த்துவோம் - முடி - தாழ்த்துவோம் எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல் ஈனமோ - அவ - மானமோ? பொழுதெல்லாம் எங்கள் செல்வம்கொள்ளை கொண்டு, போகவோ -நாங்கள் - சாகவோ? அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள் அல்லமோ? - உயிர் - வெல்லமோ? நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ - பன்றிச் - சேய்களோ நீங்கள் மட்டும் மனிதர்களோவிது நீதமோ? - பிடி - வாதமோ? பாரதத்திடை அன்பு செலுத்துதல் பாபமோ - மனஸ் - தாபமோ? கூறுமெங்கள் மிடிமையைத் தீர்ப்பது குற்றமோ - இதிற் - செற்றமோ? ஒற்றுமை வழியொன்றே வழியென்ப தோர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம் மற்று நீங்கள் செய்யுங் கொடுமைக்கெலாம் மலைவுறோம் - சித்தம் - கலைவுறோம்.