பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 117 வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே வாழ்த்துதி நீவாழ்தி வாழ்தி" என்று பாரதி வாழ்த்திப்பாடுகிறார். ஞானபானு வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன் விடுதலை வேள்வியில் உடனிருந்து பங்கு கொண்டவர் சுப்ரமணிய சிவா. சிவா ஒரு சிறந்த தேசபக்தர். விடுதலை வீரர். தியாகச் செம்மல். அன்னிய ஆட்சியாளர்களின் அடக்கு முறைக் கொடுமைகளால் சிவா அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. அந்த மாபெரும் தியாகியைப் பற்றிய செய்திகளை நமது நாட்டு மக்கள் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். சிவா ஒரு சிறந்த எழுத்தாளர் உணர்ச்சிமிக்க பேச்ச ாளர். அவர் ஞானபானு என்னும் பெயரில் ஒரு பத்திரிக்கை நடத்தினார். அதற்கு நல் வாழ்த்துக்கூறி பாரதி எழுதிய பாடல். 1. "திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம் மருவுபல் கலையின் வல்லமை என்பவெல்லாம் வருவது ஞானத்தாலே வையகமுழுதுமெங்கள் பெருமைதான் நிலவிநிற்கப் பிறந்தது ஞானபானு 2. கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமைத்துன்பம் அவலமாமனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையச்சம் இவையெல்லாம் அறிவிலாமை என்பதோர் இருளிற்பேயாம். நவமுறு.ஞானபானு நண்ணுக, தொலைகபேய்கள் 3. அனைத்தையும் தேவர்க்காக்கிஅறத்தொழில் செய்யும் மேலோர் மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம் தினத்தொளி ஞானம் கண்டிர் இரண்டுமே சேர்ந்தால் வானோர் இனத்திலே கூடிவாழ்வர் மனிதர் என்றிவைக்கும் வேதம் 4. பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கு மாங்கே, எண்ணிய எண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும் திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும் நண்ணிடு ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்" என்பது முழுமையான பாடலாகும். மரபு வழியில் பொருள் பொதிந்த இந்தக் கவிதையை பாரதி தனது தோழனின் தியாகத்திற்கும் அறிவுச் சுடருக்கும் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். பாரதி தன்காலத்திய தேசிய விடுதலை இயக்கத்தலைவர்களைப் பற்றிப் பாடியதுடன் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய அறிஞர்களைப்