பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 118 பற்றியும் தனது கவிதைகளில் கொண்டு வந்துள்ளார். என்றும் தமிழோடு இருக்கும் தாயுமானவர், அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஒர் கோயிலாக அமைந்த நிவேதிதா தேவி, சுருதியும் அரிய உபநிடதத்தின் தொகுதியும் பழுதர உணர்ந்த அபேதானந்த சுவாமிகள், ஒவியர்மணி இரவிவர்மா, இசையில்வல்ல சுப் பராம திட்சதர், தமிழுக்குப் புத்துயிர் தந்த தமிழ்த் தாத்தா மகா மகோபாத்தியாய உ.வே.சாமிநாதய்யர் ஆகியோரின் ஆற்றல் அறிவுச் செல்வம் குறித்தும் அழகிய பாடல்கள் பாடியுள்ளார். அறிவைப்போற்றும் பாரதியின் பரந்த உள்ளத்தைக் காட்டுகின்றன இப்பாடல்கள். காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் பாரதி ஒரு தடவை காரைக்குடி சென்றிருந்தார். அங்கு நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும்சேர்ந்து இந்து மதாபிமான சங்கம் என்னும் பெயரில் ஒரு சங்கம் அமைத்து செயல்படுத்திக் கொண்டு வருவதைக்கண்டு பாரதி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்த இளைஞர்கள் பிற்காலத்தில் கம்பன் கழகம் அமைத்து கம்பன் புகழ்பாடி கன்னித்தமிழ் வ ள ர் த் த சான் றே ார் க ளா ன சா. க ேண சன் , ரா ய .ெ ச ாக்கலிங்கம்முதலியோராவர். இந்த இளைஞர்களையும் அவர்களுடைய அமைப்பையும் அவர்களுடைய நற்பணிகளையும் பாராட்டி பாரதி அருமையான தொரு வாழ்த்துப் பாடலைப் பாடி அவர்களை ஊக்குவித்தார். அப்பாடலில் இந்து மதத்தின் அடிப்படைத்தத்துவத்தை மூலக்கருத்தை சுருக்கமாக தனக்கே உரித்தான கவிதை வடிவில் பாரதி வடித்துக் காட்டியுள்ளார். "மண்ணுலகின் மீதினிலே யெக்காலும் அமரரைப் போல் மடிவில்லாமல் திண்னமுற வாழ்ந்திடலாம் அதற்குரிய உபாயம் இங்கு செப்பக் கேளிர் == என்று தொடங்கி "திண்ணிய நல்லறி வொளியாய்த்திகழு மொருபரம் பொருளைக்" குறிப்பிட்டு, "செய்கையெலாம் அதன் செய்கை நினைவெல்லாம் அதன் நினைவு தெய்வமே நாம் உய்கையுற நாமாகி நமக்குள்ளே ஒளிர்வதென உறுதி கொண்டு பொய், கயமை சினம், சோம்பர், கவலை