பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 125 வானவனையென்றும், ஐயம் தீர்ந்து விடல் வேண்டும். புலையச்சம் போயொழிதல் வேண்டும், என்றும் நெஞ்சிற்கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை என்றும், ஐயமும் திகைப்பும் தொலைந்தன. ஆங்கே அச்சமும் தொலைந்தது சினமும் பொய்யும் என்றனைய புன்மைகள் எல்லாம் போயின வென்றும், யார்க்கும் குடியல்லேன் யானென்பதோர்ந்தன உன்றன் போர்க்கஞ்கவேனோ, பொடியாக்குவேன் உன்னை மாயையே என்றும், கூறுகிறார். அச்சமில்லையச்சமில்லை அச்சமென்பதில்லையே இச்சகத்துளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை அச்ச மென்பதில்லையே என்று தொடங்கி, உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று முடியும் ஒரு தனிப்பாடலையே பாரதி பாடியுள்ளார். அச்சமில்லை என்று அவ்வச் சத்தைப் போக்க வேண்டுமென்று ஒரு தனியான பாடலை அதற்கென்றே பாடிய தனிப்புலவன் பாரதிதான் என்று கூட கூறமுடியும். இன்னும் ஜயமுண்டு பயமில்லை மனமேயென்றும், பயமெனும், பேய்தனையடித்தோம்என்றும், அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும் உச்சத்திற்கொண்ட ஊமைச் சனங்களடி என அடித்துக் கூறியும் பாரதி பாடுகிறார். எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே என்றும், அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் என்றும், அச்சத்தால் நாடியெலாமவிந்து போகும் என்றும், புதிய ஆத்திசூடியின் குழந்தைகளுக்குப் பாடமாகப் பாடிய ஆத்திசூடியின் முதல் பாடலே அச்சம் தவிர் என்றும் பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா மோதிமித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்றும், மிடிமையும் அச்சமும் மேவியென்நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்று அவை பொக்கென்று நின்னைச்சரணடைந்தேன் என்றெல்லாம் அச்சத்தைப்போக்கு என பாரதி பாரத நாட்டு மக்களுக்கு அறிவுரைக் கூறுகிறார். நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் என்றும் நானும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம், ஞான நல்லறம் விரசுதந்திர ம்பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் என்றும் பாரதி பெண்ணுரிமைப் பற்றிய பாடல்களிலும் அச்சத்தைப் போக்குவதற்கு முக்கிய இடம் கொடுத்துள்ளது மிகவும் சிறப்பானது.