பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 128 பாரதி பாடாத, வேண்டாத தெய்வங்களில்லை. அதிலும் சாதாரணமக்கள் வழிபடும் சிறு தெய்வங்கள் அனைத்தையும் பாடுகிறார். சக்தியை, காளியை, மாரியை, மிகவும் உருக்கத்துடனும் உள்ளத்தின் ஈடுபாடுடனும் பாடியிருக்கிறார். மாரியை முத்து மாரியாகவும் தேசமுத்து மாரியாகவும் வரித்துப் பாடியுள்ளார். சாதாரண மக்களை நல் வழிப் படுத்த முத்து மாரி யை வேண்டுகிறார். இவையெல்லாம் பாரதியின் புது நெறியின் பகுதிகளாகும். " கலகம் செய்யும் அரக்கர் பலர் கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் பல கற்றும் பல கேட்டும் பயன் ஒன்று மில்லை, நிலையெங்கும் காணவில்லை, நின் பாதம் சரண் புகுந்தோம், துணி வெளுக்க மண்ணுண்டு, தோல்வெளுக்கச் சாம்பல் உண்டு. மணி வெளுக்க சாணையுண்டு, மனம் வெளுக்க வழியில்லை, பிணிகளுக்கு மாற்றுண்டு, பேதமைக்கு மாற்றில்லை, அடைக்கலம் இங்குனைப்புகுந்தோம். எங்கள் முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரியென்று பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமான பேத மை யைப் போக்கு மாறு முத்துமாரியை வேண்டுகிறார். கேடுகளை நீக்கும்படி, கேட்டவரம் தரும்படி, கோடிநலன் செய்யும்படி, குறைகளையெல்லாம் தீர்க்கும்படி தேசமுத்து மாரியை வேண்டுகிறார். துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம். இன்பமே வேண்டிநிற்போம். யாவும் அவள் தருவாள் என்று அந்த தேச முத்துமாளியை வேண்டுகிறார். பொருள் செல்வங்களை தங்களுக்கு மட்டும் வைத்துக் கொள்வதற்கு சிலர் முயற்சிப்பதைப் போல, அறிவுச் செல்வத்தையும் தங்களுக்கு மட்டும் வைத்துக் கொள்வதற்கான முயற்சியை பாரதி ஏற்கவில்லை. எல்லாவற்றையும் ஒன்றிணைப்பதற்கே, செல்வங்கள் அனைத் தை யும் அ ைன வ ருக்கு ம் கிடைக்கு ம் வகை யில் பரவலாக்குவதற்கு பாரதி நமது பண்பாட்டு வழியின் தொடர்ச்சியைக் கொண்டுவந்துள்ளதைக் காண்கிறோம். "தேடிச்சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித்துன்பம் மிக உழன்று - பிறர் வாடப்பலச் செயல்கள் செய்து - நரை கூடிக்கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் விழ்வேன் என்று நினைத்தாயோ?"