பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 129 என்று பாரதி தனது தெய்வத்தைக் கேட்கிறார். இந்தப் பாடலில் பாரதியின் முழுவாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருக்கிறது. உலகில் பிறந்து மடியும் எத்தனையோ ஜீவராசிகளைப் போல் சில நாள் ஆடி ஒடிக்காலம் கடத்தி பூச்சிகளைப் போல் மடிவதை எத்தனை வலுவுடன் பாரதி நிராகரித்துள்ளார் என்பதை இந்தப் பாடல்வரிகளில் காணலாம். பின்னர் பாரதி என்ன வேண்டுகிறார் நாட்டின் நலனுக்காக வளர்ச்சிக்காக, மேம்பாட்டிற்காக பல வேண்டுதல்களையும் கேட்டு கடைசியில் முடிவாக, "பலபையச்சொல்லுவதிங்கென்னே முன்னைப் பார்த்தன் கண்ணன் இவர்நேரா - எனை உய்யக் கொண்டருள வேண்டும் - அடி உன்னைக் கோடிமுறை தொழுதேன் இனி வையத்தலைமை எனக்கருள்வாய் அன்னை வாழி, நின்னதருள்வாழி" என பாரதிவேண்டுவது வையத்தலைமை வேண்டும் என்பதாகும். தனக்கு மட்டுமல்ல, பாரதத்திற்கே வையத்தலைமை வேண்டும் என்று பாரதி வேண்டுகிறார். உலகின்தலைமை பாரதத்திற்குத் தானாக வராது. அதற்கான பக்குவ நிலை தகுதி நிலைக்கு பாரதத்தை உயர்த்த வேண்டும் என்பதையே பாரதி பேசுகிறார். புதிய ஆத்தி சூடியில், இந்த நாட்டின் இளைஞர்களுக்கு "வையத்தலைமை கொள்" என்றே பாடம் சொல்லிக் கொடுக்கிறார் உலகத்தின் தலைமைக்கு பாரதம் உயரவேண்டும். உலகிற்கு பாரதம் புது நெறி காட்ட வேண்டும் என்று பாரதி வலியுறுத்துகிறார். தன்னிலையிலிருந்து நாட்ட்ை உயர்த்தும் நிலைவரை பாரதி அன்னைகாளியிடம் வேண்டுகிறார். பாரதி உலகத்தலைமை பற்றி குறிப்பிடும் போது தன்னை பார்த்தனுக்கும் கண்ணனுக்கும் இணையாக உயர்த்த வேண்டும் என்று கூறுவது நமது பண்பாட்டு மரபின் வழியாகும். கண்ணனையும் பார்த்தனையும் பாரதி பல இடங்களிலும் உயர்த்தி உதாரணம் காட்டிப் பாடுவதைக் காண்கிறோம். பாரதியின் பாரத சமுதாயம் அரசியலில் புது நெறி அமைய வேண்டும். பொருளாதாரத் துறையில் உழைப்பு. உற்பத்திப் பெருக்கம் செல்வச் செழிப்பு, இல்லாமை நீங்கி அனைவரும் சமநிலை எய்தல் ஆகிய நிலை அமைய வேண்டும். சமுதாயத்துறையில் அனைவரும் சமம், அடித்தட்டில் உள்ளோரைக்கை தூக்கி மேலே உயர்த்துதல் ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டும். கல்விஞானம் அறிவு வளர்ச்சி, கலைப்பெருக்கம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அனைவருக்கும் முழுவாய்ப்புகள் ஏற்பட வேண்டும். தகுதியும் திறமையும்