பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 13.1 இன்று நாம் பல நேரங்களிலும் தோற்றத்திலும் வேடத்திலுமான போலியான சமத்துவத்தின் பேரால் வறுமையையும் அறியாமையையும் பங்கு போட முயற்சிக்கிறோம். அதனால் வீணான கலவரங்கள் தான் வளருகின்றன. நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் கொள்கை நிலைகளையும் ஏலம் போட முடியாது. நூறு கோடி நூல்கள் படைத்த நாடு. இன்னும் நுண்ணிய பெருங்கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்து நிற்கும் இந்தப் புண்ணிய நாட்டினில் நாம் பொறியற்ற விலங்குகள் போல வாழலாகாது. பண்டைய நாட்களில் பல கலைகள் வளர்த்தோம். கல்வி வளர்த்தோம். கலைவாணிக்கு பூசை செய்தோம் என்று பேசிப் பயனில்லை. புத்தம் புதுக் கலைகளைப் படைக்க வேண்டும். உலகெங்கும் உள்ள சிறந்த கலைகள் அனைத்தையும் இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். எனவே பாரதி மீண்டும் மீண்டும் தொழில் செய், தொழில் செய் என்று கூறுகிறார். ஒரு சொல்லைப் பலதடவை அதன் பொருளை கருதாமல் திரும்பத் திரும்பக் கூறினால் அதுவே மந்திரம்போல்ஆகிவிடும். அவை பொருளற்ற வாய்ச் சொல்லாகி விடுகின்றன. ஆனால் சீரிய கருத்துக்களையும் அறிவுக் கதிர்களையும் இடைவிடாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவைகளை மக்கள் மனத்தில் பதிய வைக்க வேண்டும். கருத்துக்கள் மக்கள் மனதில் பதிந்து வேருன்றி வலுப்பெற்றுவிடுமானால், அதுவே ஒரு பெளதிக சக்தியாக பஞ்சபூத சக்தியைப் போன்று மாறி வளர்ச்சிப் பெற்று அம்மனிதனை அசகாய சூரத்தனமான செய்கையில் ஆக்கத் தொழிலில் ஈடுபடச் செய்யவைக்கும். அதனால் தான் நமது நாட்டில் மக்களை மேம்படுத்துவதற்காக, சோர்வை நீக்கி செயலில் ஈடுபடச் செ tய்வதற்காக இராமாயணம், மகாபாரதம் மற்றும் பல சாஸ்திரங்கள், கலைகள் முதலியவற்றை நமது மக்களிடம் இடைவிடாமல் திரும்பத் திரும்பப் பலவேறு முறைகளில் வடிவங்களில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ||| ■ i. - L H =. க சே = வித்தைக் கிறைவா, கனநாதா, மேன்மைத் தொழிலில் என்னைப்

  1. II 畢 H # | == H

பனிப்பாயாக" என்று பாரதி கணபதியை வேண்டுகிறார். "பண்டைச் சிறுமைகள்போக்கி என்னாவில் பழுத்த சுவைத்தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே" என்று பாரதி கனநாதனை வேண்டுகிறார். வஞ்ச மற்ற தொழில் புரிந்துண்டு வாழும் மாந்தர்க்கு குல தெ ய் வ மா வா ள் என்று ம் வெ ஞ் சமர் க் கு பி ரா கி ய கொல் லர் வித்தையோர்ந்திடும் சிற்பியர், தச்சர் என்றும், மிஞ்ச நற்பொருள் வாணிபம் செய்வோர். விர மன்னர், பின்வேதியர் யாரும் தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் என்றும் பாரதி குறி ப் பி டுவதில் சிறந்த பொருளியல் கருததுககளைக காணலாம.