பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 134 தேவையல்ல என்பதல்ல பலன்களை ஆண்டவனுடைய செயலுக்குவிட்டு விடவேண்டும் என்று கடமைகளில் தொழில்களில் மனிதன் செய்யும் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அது வலியுறுத்தப்படுகிறது. தொழில் செய்யாவிட்டால் உலகம் அழிந்துவிடும். i "எவனும் ஒரு கணப் பொழுதேனும் செய்கையின்றி இருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் செய்விக்கின்றன" என்று கீதாவாக்கியம் குறிப்பிடுகிறது. ஆதலால் மனிதன் தொழில் செய்துத்ான் தீரவேண்டும். ஆனால் நீ தொழில் செய்யுமிடத்தே அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு மனமுடைந்து ஓயாமல் துன்பப்பட்டுக்கொண்டே தொழில் செய்யும் உலகத்தாரைப்போல தொழில் செய்யாதே என்றும், தொழிலுக்குத் தன்னைத் தகுதியடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்" என்று பாரதி பகவத்கீதை முன்னுரையில் குறிப்பிடுகிறார். " மேலும் இங்கு தொழில் செய்யும் படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிருந்து என்ன மாதிரியாகச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிகமிக முக்கியமாகக் கொள்ளத்தக்கது என்றும், " பற்று நீக்கித் தொழில் செய், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, இதுதான் முக்கியமான பாடம் தொழில்கள் நீ செய்து தீரவேண்டிய தாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் முட்டுவதாயிற்றே எனவே அதை மீட்டும் மீட்டும் சொல்லவது கீதையின் முக்கிய நோக்க மன்று. தொழிலின் வலைகளில் (பந்தங்களில்) மாட்டிக்கொள்ளாதே அவற்றால் இடர்ப்படாதே, அவற்றால் பந்தப்படாதே, தளைப்படாதே, இதுதான் முக்கிய உபதேசம் என்று பாரதி குறிப்பிடுகிறார். "எந்தவிதமான மனச் சோர்வுக்கும் கவலைக்கும், கலக்கத்துக்கும் பயத்துக்கும் ஐயத்திற்கும் இடம் கொடாதிரு" என்று பாரதி குறிப்பிடுகிறார். அத்துடன் ஒருவன் தனக்குரிய, தான் எடுத்துக் கொண்டுள்ள எந்தத் தொழிலாயினும் அதில்ஈடுபாடு கொள்ள வேண்டும், அர்ப்பணிப்பு கொள்ள வேண்டும்,அத்தொழிலைப் பற்றிய முழுமையான ஞானத்தையும் அதை நிறைவேற்றக்கூடிய தகுதியையும் திறமையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும். அதனால்தான் "பண்ணிய முயற்சி