பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 140 "கஞ்சி குடிப்பதற்கிலார் எண்ணிலா நோயுடையார் இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் ஜாதி நூறு சொல்லுவார் சோதிமிக்க மணியிலே காலத்தால் சூழ்ந்த மாசு போன்றனை என்றெல்லாம் பாரதியின் கவிதைவரிகள் குறித்துக் காட்டுகின்றன. தமிழின் பழம் பெருமையும், இந்நாளில் ஏற்பட்டிருக்கும் சிறுமையையும் பற்றிப் பாடியுள்ள அப்பாடல்களில் புதிய நெறிகளை புதிய கடமைகளை வற்புறுத்திக் கூறுகிறார். மக்களின்அறியாமை, கல்லாமை, தீண்டாமை மூட நம்பிக்கைகள், மூடப் பழக்க வழக்கங்கள் பெண்ணடிமை முதலிய கொடுமைகளையும் பரிதாப நிலைமைகளையும் கண்டு மனம் புழுங்கி புதிய நெறிகளை நமக்குக் காட்டி புதிய மார்க்த்திற்கு வழி காட்டுகிறார். இவ்வாறு பாரதியின் சுதந்திரம், விடுதலை என்னும் கருத்து வடிவங்கள் பன்முக பரிமாணங்களைக் கொண்டதாகும். அதையே அவர் முழுமையான சுதந்திரம் என்று கருதினார். கூறினார் அதையே பரிபூரண சுதந்திரம் என்று தேசிய விடுதலை இயக்கம் முன்வைத்தது. அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது அரசியல் சுதந்திரத்தின் முதல் கட்டம். இதை பாரதி எந்த வித தயக்கதிற்கும், ஊசலாட்டத்திற்கும் இடமில்லாமல், முன்பின் முரணில்லாமல் சுதந்திரம் என்னும் பிரச்சனையில் எந்த விதமான விட்டுக் கொடுத்தலுக்கும் சமரசத்திற்கும் இடமில்லாமல் வற்புறுத்தி புரட்சிகரஜனநாயக உணர்வு நிலையில் வலியுறுத்திப் பாடியுள்ளார். பாரதி சுதந்திரம், ஜனநாயகம் பற்றி, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூறிய அரசியல் கருத்துக்கள் பலவும் 1950-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளின் பகுதியிலும், வழி காட்டும் கோட்பாடுகள் பகுதியிலும் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இரண்டாவதாக மனித வாழ்க்ககைக்கு அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ள பொருளாதார வசதிகளும் வாய்ப்புகளுமாகும். உணவு, உடை, விடு, கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு, வேலை, பொழுது போக்கு, வசதிகள், விளையாட்டு வசதிகள், நாகரிகமான மனித வாழ்க்கைக்கு அவசியமான அத்தனை வாய்ப்புகளும் வசதிகளும், ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதை பல ,