பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 7 என்னும் சொல்லில் வள்ளுவப்பெருமானும், கம்பநாடரும் தங்களது பேரிலக்கியங்களில் விளக்குகிறார்கள். வள்ளுவர் தனது அறத்துப்பாலில் மனிதனுடைய கடமைகளை இல்லறம் துறவறம் என்னும் தலைப்புகளில் விளக்கிக் கூறுகிறார். கம்பன் அறம் வெல்லும் என்னும் மகத்தான லட்சியத்தையும் அதை நிறைவேற்ற வேண்டிய கடமையின் கடமையாக தனது மகாகாவியத்தில் பல இடங்களிலும் குறிப்பிட்டுக்கூறுகிறார். பாரதி தனது விநாயகர் நான்மணிமாலையில் "கடமையாவன், தன்னைக்கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல் விநாயக தேவனாய் வேலுடைக்குமரனாய் நாராயணனாய், நதிச்சடைமுடியனாய், பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி அல்லா, யெஹோவா எனத்தொழுதன்புறும் தேவரும் தானாய், திருமகள், பாரதி உமையெனும் தேவியருகந்த வான்பொருளாய், உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல் இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும் கடமையெனப்படும் பயனிதில் நான்காம் அறம்பொருள் இன்பம் விடெனும் முறையே தன்னையாளும் சமர்த்தெனக்கருள்வாய்" என்று குறிப்பிடுகிறார். அறம், பொருள், இன்பம், விடு என்பதையே இந்து தர்மம் நான்கு புரு வடிார்த்தங்க ளான தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று வகைப்படுத்திக் கூறுகின்றது. நமது நாட்டில் சிலர், மேலைநாடுகள் பொருளாயத வாழ்க்கையை அதாவது லெளகீகவாழ்க்கையை அதிகமாக வலியுறுத்துகின்றன என்றும் அதற்கு மாறாக பாரத நாடு ஆன்மீக வாழ்க்கைக்கே அதிக அழுத்தம் கொடுக்கிறது எனவும் கூறிவருகின்றனர். இது முழு உண்மையல்ல.அந்தக் கருத்துக்களால் பாரதம் பாதிக்கப்பட்டிருக்கிறதே யொழிய அதனால் மேன்மையுறவில்லை. ஆன்மீக வாழ்க்கையைப்பற்றி அதிகமாகக் கூறிவரும் அறிவுச் செல்வர்களும் தங்கள் வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் வச திகளையும் அனுபவிக்க முயன்றுள்ளார்கள் யாரும் அவைகளை த் துறந்துவிடவில்லை. நமது வேதங்களும் இந்து தர்மசாத்திரங்களும் வாழ்க்கையை வெறுக்கச்சொல்லவில்லை. வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து முடி வில் விடு பெற வேண்டும். முழுவிடுதலை பெற வேண்டும். அதாவது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு ப் பின் வாழ்க்க ச்ைசு ைமகளிலிருந்து முழுவிடுதலை பெற வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. தர்மம் (. அறம்) அர்த்தம் (பொருள) காமம் (இன்பம்) மோட்சம் (விடு) என்னும் புரு எர்த்தங்கள் (பயனிடுகள்) மனித வாழ்க்கை அனைத்து வழிகளிலும் செழிப்புறவே வழி வகுத்துக் கூறுகின்றன.