பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 145 பலரும் தீஞ்சுவைக்காயங்களும் பல சாத்திரங்களும் செய்தார்கள் என்றெல்லாம், பெருமைப்பட்டாலும் தமிழின் தற்கால நிலைகண்டு பாரதி கலக்க முற்றான். புத்தம்புதுக்கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள், கூறும் மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை என்னும் வசைக் சொல்லைத்தடுக்க, "சென்றிடுவிர் கா: ' டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும்கொணர்ந்திங்கு சேர்ப்பிர்" என்று பாரதி ஆணையிட்டார் அத்துடன் தமிழனுக்கு மிகச் பெரிய கடமைகளை பாரதி வகுத்துக் கொடுத்துச் சென்றுள்ளான். வெறும் பழம்பெருமை பேசிப்பலன் இல்லை தமிழ் மொழிபோல் இனிய மொழி உலகில் வேறு எங்கும் இல்லை. இருப்பினும் நாம் பாமரராய் விலங்குகளாய் உலகோர் எல்லாம் இகழ்ச்சியாக நம்மைப் பேசுதவற்கு இடம் தரலாமா? எனவே நீ என்ன செய்ய வேண்டும்? தேமதுரத்தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும் இதர பல புலவர்களும் பிறந்த இந்தத் தமிழ் மண்ணில் நாம் ஊமையராய், செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோமே இது சரியா? சேம முறவேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்று பாரதி பேசுகிறார். இன்னும் பேசுகிறார். "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல்வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். மறைவாக நமக்குள்ள பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமையான புலமையெனில் வெளிநாட் டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப் போல்கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் விழ்ந்திருக்கும் குருடர் எல்லாம்.