பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 146 விழிபெற்றுப்பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைக்கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார் என்னும் இனிய தமிழ்ப்பாடலைப் படைத்துக் காட்டி நமக்கு அறிவுரை கூறியுள்ளார். இன்று உலகில் பல நகரங்களிலும் தமிழ் சங்கங்கள் அல்லது தமிழர்அமைப்புகள் அமைந்துள்ளன. இந்தியாவின் பல பழய புதிய நகரங்களில் மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாக் கண்டங்களில் உள்ள பல நகரங்களிலும் உள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழர் அமைப்புகளின் செயல் திறனை விரிவுபடுத்த வேண்டும். நிதி நிறைந்தோரும் தமிழ் அறிஞர்பலரும் அதற்கு உதவிட வேண்டும். "வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகு போல் தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து ஞானம் பொய்க்க நசிக்குமோர் சாதி சாத்திரங்கண்டாய் சாதியின் உயிர்த்தலம் சாத்திரம் இன்றேல் சாதியில்லை பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள் பொய்மையாகி புழுவென மடிவர் என்று ஒரு கடுமையான எச்சரிக்கையை பாரதி விடுத்துள்ளார். இது தமிழ்சாதிக்கும் பாரத சாதிக்கும் விடுத்த எச்சரிக்கையாகும். இதற்கு வழி ঢাকঠাতো? பாரதியே வழி காட்டுகிறார். தமிழ் மக்களிடையில் அறிவுத் துறை யி ல் தலைமை யாய் உள்ளவர்களிடம் இரு பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு பிரிவு மேலைநாட்டு நாகரிகமே சிறந்தது என அதைத் தழுவிச் சென்று தமிழை மறத்தல், மற்றொன்று வெறும் பழமை பேசி பாசி படிந்த நாசப்புலவர் என்று குறிப்பிடுகிறார். பாரதி காலத்தில் இந்தப் பிரிவுகள் இரண்டும் தமிழகத்தில்வலுவாக இருந்தன. இப்போது சிறிது சிறிது மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் சீரான நிலை அடைவதற்கு நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியதிருக்கிறது. எனவே "நன்மையும் அறிவும் எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்விராயின்.அச்ச மொன்றில்லை" என்னும் அருமையான தொரு பொதுக்கருத்தை பொருத்தமான முறையில் பாரதி எடுத்துக் காட்டியுள்ளார்.