பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 8 நல்ல வாழ்க்கை அமைவதற்கு அவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் வேண்டும். சமுதாய வாழ்க்கை மேன்மையடைய அபரிமிதமான அளவில் பொருள்கள் செய்து குவிக்கப்பட வேண்டும். அதற்கான தொழில்கள் திதில்லாதவைகளாக அறவழியிலான தொழில்களாக இருக்க வேண்டும் என்பதை நமது சாத்திரங்கள் வலியுறுத்துகின்றன. "செய்யும் தொழில் உன் தொழிலே காண் சீர்பெற்றிட நீ அருள் செய்வாய்" என பாரதி விநாயகரை வேண்டுகிறார்.இன்னும், "அச்சம் திரும், அமுதம் விளையும், வித்தைவளரும்" என்றும், "வேலைத்தவறு நிகழாது, நல்ல வினைகள் செய்து என்றும், "ஆக்கத்திலே, தொழில் ஊக்கத்திலே" என்றும், "ம லகத்தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்" என்றும், "இதம்தரு தொழில்கள் செய்து எனவும், "திறமைகொண்ட தீமையற்ற தொழில்புரிந்து யாவரும் தேர்ந்தகல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே" என்றும் " உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்றும், "தருவாய் தொழிலும் பயனும்" என்றும், "சக்தி செய்யும் தொழில்களை எண்ணு" என்றும் " தொழில் பண்ணப்பெருநிதியம் வேண்டும், அதில் பல்லோர் துணை புரிதல் வேண்டும்" என்றும், "கூடுந்திரவியத்தின் குவைகள் - திறல், கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை "நாடும்படிக்கு வினைசெய்து-இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க" என்றும் " பாயும் ஆயிரம் சக்திகளாகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை" CTT&ToTT "ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் விடுகளும் நெடுநிலமும் விரைவினிலேதருவாய்" "நாடு மணிச்செல்வம் எல்லாம் நன்கருள்வாய் பொருளே பெருங்களியே திருவே" எனவும் "வீரர்தம் தோளினிலும் - உடல் வெயர்த்திட உழைப்பார் தொழில்களிலும் பாரதி சிரத்தினிலும் - ஒளி பரவிடவிற்றிருந்தருளாய்" என்றும் "வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர்குல தெய்வமாவாள்" என்றும் "துெ ல்வங்கள் பொங்கிவரும் - நல்ல தெள்ளறிவெய்தி நலம்பல சார்ந்திடும்" என்றும் "திருவைப்பணிந்து நித்தம் செம்மைத்தொழில் புரிந்து" என்றும் " கூடித்தொழில் செய் கைத்தொழில் போற்று "பணத்தினைப்பெருக்கு" என்றும், " அரும்பும் வேர்வை உதிர்த்துப்புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவிரே" என்றெல்லாம் பாரதி தொழிலைப்பற்றியும் தொழிலின் மேன்மையைப் பற்றியும் செல்வப்பெருக்கத்தைப் பற்றியும் நுகர்வைப்பற்றியும் அழுத்தம் கொடுத்து தன்னுடைய பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார். உலக நன்மையைக் கருதி எல்லோரும் தொழில் செய்யவேண்டும் என்பதை கீதை வலியுறுத்திக் கூறுவதை பாரதி தனது பகவத்கீதை மொழிப் பொயர்ப்பு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் தெளிவாக வலியுறுத்திக் கூறுகிறார்.