பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியர் அ.சீனிவாசன் 1925-ம் ஆண்டு, இன்றைய விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்துர் வட்டம் மகராஜபுரம் கிராமத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே தேசீய விடுதலை இயக்கத்திலும், காங்கிரஸ் சோஷலிஸ்டு இயக்கத்திலும் பொதுவுடமை இயக்கத்திலும் தொடர்பு கொண்டு தொழிற்சங்கப் பணிகளிலும் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டவர். தமிழ் இலக்கியங்களிலும் வைணவ இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டவர். தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு இரண்டாவது உலகப் போர்காலத்தில் இந்திய விமானப்படையில் தொழில்நுட்பத்துறையில் செ ய்தித் தொடர்புப் பொறியாளராகப் பயிற்சி பெற்று பணியாற்றியவர். விருதுநகர் மாவட்டத்திலும் சென்னை நகர்த்திலும் பல்வேறு தொழிற்சங்கங்களில் பொறுப்பேற்று தொழிற்சங்கத்தலைவராகப் பணியாற்றியவர். ஜன சக்தி நாளிதழின் ஆசிரியராகவும் மார்க்சீய ஒளி ஆசிரியராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தத்துவம், இலக்கியம் பற்றி இருபதுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தன்னுடைய சிறப்பான எழுத்துப்பணிக்காக சோவியத் நாடு நேரு விருது பெற்ற வர் சிறந்த இதழாசிரியாக ப் பணியாற்றியமைக்காக கெளரவப்பட்டயம் பெற்றவர். கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதி பால் ஈடுபாடுகொண்டு, இப்போது பல இலக்கிய நூல்களை எழுதிவருகிறார்.